இந்தியா

“ஒரே நாளில் 15,413 பேர் பாதிப்பு - 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு” : என்ன செய்கிறது மோடி அரசு?

கொரோனாவால் நாடு முழுவதும் ஒரே நாளில் பலியானோரின் எண்ணிக்கை 306 ஆக உயர்ந்துள்ளது.

Kamal Kishore
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 8,915,891 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 466,728 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 2,330,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,330,578 பேர் பலியாகினர்.

இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 5வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவைத் தொடர்ந்து 4-வது இடத்தை பிடித்ததுள்ளது.

“ஒரே நாளில் 15,413 பேர் பாதிப்பு - 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு” : என்ன செய்கிறது மோடி அரசு?

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த மூன்றரை மாதங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சம் தாண்டியது. இந்தியாவில் பாதிப்பு மே 19 ம் தேதி ஒரு லட்சத்தை எட்டியது. அதனையடுத்த கடந்த 8 நாட்களில் ஒரு லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக கடந்த 18 நாட்களில் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,413 ஆக பாதிப்பு உயர்ந்துள்ளது. 15,413 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளது. இதுவரை, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,10,461 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,254 ஆக அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடி உலக நாடுகளே இந்தியாவின் தடுப்பு நடவடிக்கையை பாராட்டுவதாக சொல்லும் வேலையில், உலகில் மோசமான பாதிப்பை சந்திக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா சென்றிருப்பது பிரதமர் சொன்ன கூற்று பொய் என தெரிவதாக வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த பாதிப்புக்கு மத்தியில் சீனா இந்தியா இடையே எல்லையில் நடந்த மோதல் மற்றோரு பிரச்சனையாக மாறியுள்ளது. மோடி அரசு நிலைமையை உணர்ந்து செயல்பட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories