இந்தியா

குப்பை வண்டியில் சடலத்தை ஏற்றிய விவகாரம்: “மனித குலத்துக்கே அவமானம்” - உ.பி அரசுக்கு NHRC கண்டனநோட்டீஸ்!

சாலையோரத்தில் உயிரிழந்தவரின் உடலை நகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் ஏற்றிச் சென்றது குறித்து உத்தர பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குப்பை வண்டியில் சடலத்தை ஏற்றிய விவகாரம்: “மனித குலத்துக்கே அவமானம்” - உ.பி அரசுக்கு NHRC கண்டனநோட்டீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ மாவட்டத்துக்கு 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்ராம்பூர் பகுதியில் சாலையோரத்தில் மயங்கியபடி உயிரிழந்த நபரின் உடலை போலிஸார் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் ஏற்றிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முகமது அன்வர் என்பவர், அரசு அலுவலகத்துக்கு சென்றபோது சாலையில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரது உயிர் பிரிந்துள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர் இறந்தவரின் உடலை தொடுவதற்கு பயந்துகொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.

பின்னர் வந்த நகராட்சி ஊழியர்கள் சாலையோரத்தில் கிடந்த முகமது அன்வரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள். இவையனைத்தும், அந்நகர போலிஸார் முன்னிலையிலேயே நடந்துள்ளது.

மேலும், இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்கள் மூலம் தீயாகப் பரவி வருகிறது. இதனையடுத்து, வீடியோவில் காணப்பட்ட காவல்துறையினர் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகச் செய்திகள் மூலம் அறிந்த சிறுபான்மையின் நல ஆணையமும், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உத்தர பிரதேச அரசு, பல்ராம்பூர் நகராட்சி ஆணையர், மாநில போலிஸ் டிஜிபி ஆகியோருக்கு கூட்டாக நோட்டீஸ் அனுப்பியுள்ளன.

அதில், சாலையில் விழுந்து உயிரிழந்தவரின் உடலை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஊழியர்களிடமிருந்து இதனை துளியளவும் எதிர்ப்பார்க்கவில்லை. இது வெட்கக்கேடானது. போலிஸாரும், அரசு ஊழியர்களும் நடந்துகொண்ட விதம் நாகரிகமற்ற செயல். இது தொடர்பாக உ.பி. போலிஸ் டிஜிபி, பல்ராம்பூர் நகராட்சி ஆணையர், தலைமைச் செயலாளர் என அனைவரும் 4 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

குப்பை வண்டியில் சடலத்தை ஏற்றிய விவகாரம்: “மனித குலத்துக்கே அவமானம்” - உ.பி அரசுக்கு NHRC கண்டனநோட்டீஸ்!

அதேபோல, சிறுபான்மையினர் நல ஆணையம் விடுத்துள்ள நோட்டீஸில், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை குப்பை வண்டியில் நகராட்சி ஊழியர்கள் ஏற்றிச் சென்றதும், அதனை கைக்கட்டி வேடிக்கை பார்த்த போலிஸாரின் செயலும் மனித குலத்துக்கே அவமானம். வெட்ககேடான மனித தன்மையற்றதின் உச்சகட்டம் என கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வரும் ஜூன் 15ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி ஆணையரும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories