இந்தியா

இந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - “பாதுகாப்பாகவே இருக்கிறோம்” என மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - “பாதுகாப்பாகவே இருக்கிறோம்” என மத்திய அரசு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டெல்லியில் இன்று சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் மற்றும் ஐ.சி.எம்.ஆர் முதன்மை ஆய்வாளர் டாக்டர் நிவேதிதா குப்தா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்திலிருந்து வெகு தூரத்தில் இருப்பதாக நிவேதிதா குப்தா தெரிவித்தார். உலக நாடுகளை ஒப்பிடும்போது பாதுகாப்பான நிலையிலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதிப்பு எண்ணிக்கையை மட்டும் வைத்து உலக நாடுகளோடு ஒப்பிடுவது சரியான வழிமுறை இல்லை என்று கூறிய லாவ் அகர்வால் இந்தியாவின் மக்கள்தொகையையும் கணக்கில் கொண்டு ஒப்பிடவேண்டும் என்று தெரிவித்தார்.

உயிரிழப்பு எண்ணிக்கை 2.8% ஆக குறைந்திருப்பதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 48% ஆக உயர்ந்துள்ளதாகவும் லாவ் அகர்வால் கூறினார்.

இதனிடையே தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 5,628 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 96,534 பேர் குணமடைந்துள்ள நிலையில் 98,834 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோதனை எண்ணிக்கையும் இன்று 40 லட்சத்தைக் கடந்துள்ளது.

banner

Related Stories

Related Stories