இந்தியா

"இந்தியாவிலிருந்து ரூ.1.2 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேற்றம்" - மோடி அரசால் பின்வாங்கிய முதலீட்டாளர்கள்!

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து ரூபாய் 1.2 லட்சம் கோடி முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து ரூ.1.2 லட்சம் கோடி முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனர்.

கொரோனா தொற்று உலகெங்கும் தீவிரமடைந்துள்ளதால் நிச்சயமற்ற நிலை தொடர்வதால் உலகப் பொருளாதார மீட்சி என்பது கணிக்கப்பட்டதை விட பலவீனமாகவே இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் ஆசிய பொருளாதார நாடுகளில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூபாய் 2 லட்சம் கோடியை திரும்பப் பெற்றுள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 16 பில்லியன் டாலர் அதாவது, 1.2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வெளியேறியுள்ளது.

கொரோனா நெருக்கடி நிலையில், பொருளாதார திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய பா.ஜ.க அரசு தோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது.

"இந்தியாவிலிருந்து ரூ.1.2 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேற்றம்" -  மோடி அரசால் பின்வாங்கிய முதலீட்டாளர்கள்!

இதுதொடர்பாக, அமெரிக்க காங்கிரஸின் ஆய்வு மையம் பொருளாதாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், வளர்ந்து வரும் ஆசிய பொருளாதாரங்களில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 26 பில்லியன் டாலரை வெளியே எடுத்துள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 16 பில்லியன் டாலர் முதலீடு வெளியேறியுள்ளது.

ஊரடங்கு காரணமாக வியாபார மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்துவிட்டது. இதனால் விமானப் போக்குவரத்து, சொகுசு கப்பல்கள், ஹோட்டல் துறையினர் பல லட்சம் கோடி நஷ்டம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டு இத்துறைகளின் பல நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories