இந்தியா

“அகமதாபாத்தில் பாதுகாப்பின்றி தெருவில் வீசப்பட்ட கொரோனா நோயாளியின் உடல்” - இதுதான் குஜராத் மாடலா?

அகமதாபாத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 70 வயது முதியவரின் உடல், மருத்துவமனைக்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அகமதாபாத்தில் பாதுகாப்பின்றி தெருவில் வீசப்பட்ட கொரோனா நோயாளியின் உடல்” - இதுதான் குஜராத் மாடலா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது குஜராத். அங்கு இதுவரை 11 ஆயிரத்து 380 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. உயிரழப்பு மட்டுமே 659 ஆக உள்ளது.

அங்கு நோயாளிகளுக்கு சீரான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை பாகுபாடுகள் பார்க்கப்படுவது என தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அகமாதாபாத் சிவில் மருத்துவமனையில் கடந்த மே 10ம் தேதி குன்வந்த் மக்வானா என்ற 70 வயது முதியவர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸுக்கான அறிகுறிகளும் இருந்த காரணத்தால் சோதனையும் செய்யப்பட்டிருக்கிறது.

“அகமதாபாத்தில் பாதுகாப்பின்றி தெருவில் வீசப்பட்ட கொரோனா நோயாளியின் உடல்” - இதுதான் குஜராத் மாடலா?

பரிசோதனைக்கான முடிவுகள் வருவதற்கு முன்பே அந்த முதியவர் உயிரிழந்திருக்கிறார். அதன் பிறகு, எவ்வித பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல், அவரின் உடலை பொதுவெளியில் தூக்கி எறிந்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். ஆனால், சோதனை முடிவில் முதியவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, பேசியுள்ள முதியவரின் மகனான கிர்தி மக்வானா, “எனது தந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறது என அனுமதித்த நாள் முதல் எதையுமே மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. அவரை காண எங்களையும் அனுமதிக்காமல் வீட்டுக்குச் செல்லும்படி கூறினர்.

அதன் பிறகு, தானிலிம்டா பேருந்து நிலையம் அருகே அதிகாலை 3 மணியளில் போலிஸார் எனது தந்தையின் இறந்த உடல் இருப்பதை அறிந்து பிரேத பரிசோதனைக்காக எஸ்.வி.பி. மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றிருக்கிறார்கள். அங்கு சென்றபோது, எனது தந்தை கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார் என தெரிவித்தார்கள். ஆனால், எங்கு? எப்போது என்று எங்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. மேலும், உடற்கூறாய்வு செய்ததன் அறிக்கையும் ஒப்படைக்கவில்லை என கிர்தி மக்வானா கூறியிருக்கிறார்.

“அகமதாபாத்தில் பாதுகாப்பின்றி தெருவில் வீசப்பட்ட கொரோனா நோயாளியின் உடல்” - இதுதான் குஜராத் மாடலா?

மேலும், இறந்தவரின் உடலை கொண்டுச் செல்வதற்கான எவ்வித பாதுகாப்பு ஏற்பாடு, ஆம்புலன்ஸ் என எந்த உதவியையும் மருத்துவமனை தரப்பு செய்துத் தரவில்லை. ரூ.1500 கொடுத்து பிளாஸ்டிக் கவர் வாங்கி எனது தந்தையின் உடலை மூடினோம். வார்டு பாயிடம் ரூ.200 கொடுத்து உடலின் மீது கிருமி நாசினியை தெளிக்க வைத்தோம். மருத்துவமனை தரப்பிடம் கையுறை, மாஸ்க் கேட்டதற்கு நீங்களேதான் வாங்கிக்கொள்ள வேண்டும் என அலட்சியமாகவே பதிலளித்தார்கள் என மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார் கிர்தி.

ஆனால், அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் பிரபாகர் கூறும் போது, மே 14ம் தேதி குன்வந்த் மக்வானா உயிருடன் இருக்கும்போதே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார். அவர் மருத்துவமனையில் இறக்கவில்லை என கூறியிருக்கிறார்.

பேருந்து நிலையத்தில் கிடத்தப்பட்ட முதியவரின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, சிவில் மருத்துவமனையின் செயலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஏழை எளியவர்களை கையாளும் போது இது போன்ற அலட்சியங்கள் தொடர் கதையாகி வருகிறது. இந்த விவகாரங்களுக்கு தார்மீக பொறுப்பேற்றுக்கொண்டு முதலமைச்சர் பதவியில் இருந்து விஜய் ரூபானி விலகி வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories