இந்தியா

“24,000 கிலோ வெங்காயத்தை விற்க முடியாமல் தவித்த விவசாயிகள்” - மொத்தமாக வாங்கி இலவசமாக வழங்கிய காங்கிரஸ்!

கொரோனா ஊரடங்கால் விற்க முடியாமல் போன 24,000 கிலோ வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து விலைக்கு வாங்கி காங்கிரஸ் கட்சியினர் மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் விவசாயிகள் விளைவித்த தங்கள் பொருட்களை சந்தைக்குக் கொண்டுப்போக முடியாமல் மிகுந்த சிரமங்களை சந்தித்தனர்.

இதனால், வேதனையடைந்த விவசாயிகள் பலர், விளைந்த விவசாயப் பொருட்களை பறிக்காமல் நிலத்திலேயே வீட்டுச் சென்றனர். இன்னும் சில இடங்களில் போலிஸாரின் கெடுபிடியால் சந்தைக்குச் கொண்டுச் செல்லும் காய்கறிகளை சாலைகளில் வீசிச் சென்றச் சம்பவம் கூட அரங்கேறியது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து வெங்காயம் விற்பனை செய்யப்படாமல் இருந்ததால், அதிகளவிலான வெங்காயம் சவுராஷ்டிரா விவாயிகளிடம் தேங்கி விட்டது.

“24,000 கிலோ வெங்காயத்தை விற்க முடியாமல் தவித்த விவசாயிகள்” - மொத்தமாக வாங்கி இலவசமாக வழங்கிய காங்கிரஸ்!

இந்நிலையில், அந்த விவசாயிகளிடம் இருந்த வெங்காயத்தை விலை கொடுத்து காங்கிரஸ் கட்சியினர் வாங்கினார்கள். பின்னர், அந்த பகுதியில் உள்ள ஏழைகளுக்கு 3 கிலோ வீதம் வெங்காயங்களை இலவசமாக வினியோகம் செய்து உதவினார்கள்.

இதுதொடர்பாக, ராஜ்கோட் காங்கிரஸ் தலைவர் வைரல் பட் கூறுகையில், தற்போது விவசாயிகளிடம் இருந்து 24,000 கிலோ வெங்காயத்தை காங்கிரஸ் கட்சியே வாங்கியுள்ளது. விவசாயிகள் வெங்காயத்தை விற்க முடியாமல் அவதிப்படுவதாகவும், சந்தையில் இருக்கும் வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்படுவதால் மக்களும் அவதிப்படுவதையும் உணர்ந்தோம்.

அதனால் விவசாயிகளிடன் இருக்கும் வெங்காய்த்தை மொத்தமாக வாங்குவது என முடிவு செய்து 24,000 கிலோ வெங்காயத்தை வங்கியுள்ளோம். இதுவரை 3,000 ஆயிரம் குடும்பங்களுக்கு 7 கிலோ வெங்காயம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அடுத்தக்கட்ட நிவாரணப் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

அதுமட்டுமின்றி பிறப்பகுதிகளில் இதே நிலைமைதான். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்கவிட்டால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பது மட்டுமல்லாமல், சந்தையில் வெங்காயத்தின் பெரும் பற்றாக்குறையும் உண்டாகும். ” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories