இந்தியா

“அமெரிக்காவிற்கு மருந்துகள் வழங்கவிட்டால் இந்தியா பின்விளைவுகளை சந்திக்கும்”: மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவிற்கு கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா வழங்கவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடும் வகையில் பேசியுள்ளார்.

“அமெரிக்காவிற்கு மருந்துகள்  வழங்கவிட்டால் இந்தியா பின்விளைவுகளை சந்திக்கும்”: மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் 367,385 -க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,129 ஆக உயிரிழந்துள்ளனர். இந்த இறப்பு விகிதம் இன்னும் அதிகரிக்கும் என அமெரிக்க அதிபரே கூறியிருந்தார்.

இந்த இக்கட்டான சூழலில் வல்லரசு அமெரிக்காவிடம் போதிய மருத்துவ உபகரணம் இல்லாமல்லும் மருந்துக்கள் இல்லாமலும் அந்நாட்டு மருத்துவத்துறை மிகுந்த சிறமங்களை சந்தித்துவருகின்றனர். அதனால் அதிபர் ட்ரம்ப் தங்களுக்கு எதிரிநாடு என கூறிவந்த சீனாவிடமே தற்போது உதவிக்கேட்டுள்ளார். அந்த உதவிகளையு சீன அரசு உடனே வழங்கியுள்ளது. இன்னும் மருத்துவ உபகரணம் வழங்கும் பணியிலும் இறங்கியுள்ளது சீனா.

“அமெரிக்காவிற்கு மருந்துகள்  வழங்கவிட்டால் இந்தியா பின்விளைவுகளை சந்திக்கும்”: மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்

இதற்கிடையில், அவ்வப்போது ஈரானை அமெரிக்கா மிரட்டி அறிக்கை விடுவதும் ஊடகம்வாயிலாக செய்தி வெளிவருகிறது. இந்நிலையில், அமெரிக்காவிற்கு கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா வழங்கவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடும் வகையில் பேசியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,000-ஐ தாண்டிய நிலையில் முன்னதாகவே மத்திய அரசு இந்தியாவில் இருந்து மருத்துப்பொருட்கள் ஏற்றுமதிக்கு தடைவித்தது. இதனிடையே கொரோனாவைக் கட்டுப்படுத்த மலேரியாவை குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்ததை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது.

அதனால் ஓரளவு பயன் தரும்வகையில் உள்ளதால் இந்தியாவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த மாத்திரைகளை ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்ததது.

“அமெரிக்காவிற்கு மருந்துகள்  வழங்கவிட்டால் இந்தியா பின்விளைவுகளை சந்திக்கும்”: மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்

ஆனால், இந்தியாவிடன் இருந்து மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை பெருவதற்கு அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது. மத்திய அரசின் இந்த தடையால், தற்போது அந்த மாத்திரைகளை அமெரிக்காவிற்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடும்போது, அமெரிக்கா ஆர்டர் செய்திருந்த கொரோனா சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை இந்தியா எங்களுக்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடியும் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். இருப்பினும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதிக்கு இந்தியா மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனாலும் இந்தியா மனித நேய அடிப்படையில் சில நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்கி வருகிறது.

“அமெரிக்காவிற்கு மருந்துகள்  வழங்கவிட்டால் இந்தியா பின்விளைவுகளை சந்திக்கும்”: மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அமெரிக்கா இந்தியாவுடன் நல்ல நட்புடன் இருக்கிறது. அதற்குகாரணம் இந்தியா பல ஆண்டுகளாக அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து பல பலன்களை அடைந்திருக்கிறது. வர்த்தகத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாத போது, நாங்கள் கேட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தால் அது நிச்சயம் எனக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

நான் பிரதமர் மோடியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசினேன். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடையை நீக்குங்கள். ஆர்டர் செய்த மருந்துகளை நாங்கள் பெற அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என கூறினேன். நட்பு நாடு என்கிற அடிப்படையில் அமெரிக்காவுக்கு இந்தியா மருந்து அனுப்பும் என நம்புகிறேன்.

மருந்தை அனுப்பவிலையென்றாலும், பரவாயில்லை; ஆனால் அதற்கான விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும். எதிர்காலத்தில் பதிலடி இருக்கும். ஏன் பதிலடி கொடுக்கக்கூடாது?” எனத் தெரிவித்தார். அமெரிக்கா அதிபரின் இந்த பேச்சு மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories