இந்தியா

“கொரோனா சிகிச்சைகாக தற்காலிக மருத்துவமனை அமைக்க ரெசார்ட்களை வழங்கிய மகேந்திரா” : குவியும் பாராட்டுக்கள்!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் மகேந்திரா ரெசார்ட்களை, தற்காலிக மருத்துவ முகாம்களாக மாற்றிக் கொள்ள அதன் குழுமத்தலைவர் ஆனந்த மகேந்திரா அனுமதியளித்துள்ளார்.

“கொரோனா சிகிச்சைகாக தற்காலிக மருத்துவமனை அமைக்க ரெசார்ட்களை வழங்கிய மகேந்திரா” : குவியும் பாராட்டுக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தனது தீவிரத்தன்மையைக் காட்டத் துவங்கியுள்ளது. அதன் காரணமாக நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவற்றை மக்கள் தீவிரமாக கடைபிடிக்கவேண்டும் என்றும், மீறிவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பல மாநில அரசுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக இந்தியாவில் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதற்கான மருத்துவ கட்டமைப்பு இந்தியாவில் இல்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில், மகேந்திர நிறுவனத்திம் தங்களுக்கு சொந்தமான விடுமுறையில் தங்குமிடத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்துள்ளது. இதுதொடர்பாக மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் கொரோனா பாதிப்பு மூன்றாவது நிலைக்கு செல்லக்கூடிய நிலையில் உள்ளதாக மருத்துவ துறை நிபுணர்களிடம் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர்.

அதனால், நோய் தொற்று பரவும் வீதம் தீவிரமடையும் என்றும் லட்சக்கணக்கானவர்களைப் பாதிக்கும் என கூறப்படுகிறது. அந்த பாதிப்பு மருத்துவ கட்டமைப்பில் பெரும் பதிப்பை ஏற்படுத்தும்; எதுவாக இருந்தாலும் தற்காலிய மருத்துவமனைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை நாம் கொண்டிக்கவேண்டும்; ஆனால் நம்மிடம் செயற்கை சுவாசக்கருவிகள் (வெண்டிலேட்டர்கள்) பற்றாக்குறையில் உள்ளது.

இந்த ஆபத்தான சூழலை உணர்ந்து பொறுப்பான முறையில் நடந்துக்கொள்ளும் வகையில், எங்களின் உற்பத்தி சாதனங்களைக் கொண்டு வெண்டிலேட்டர்கள் தயாரிக்கும் வேலையை மகேந்திரா நிறுவனம் தொடங்கும். இந்த விடுமுறைகளில், மகேந்திரா ரெசார்ட்களை, தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைத்துக்கொள்ள அனுமதிக்கின்றோம்.

அதுமட்டுமின்றி, மகேந்திர குழுமம் நிதியை திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ என்னுடைய சம்பளத்தில் 100% தொகையை முழுமையாக வழங்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories