இந்தியா

"மொட்டைமாடியில நின்னு கைதட்டுனா காசு வந்துடுமா?"- மோடியின் வேண்டுகோளும் துப்புரவு தொழிலாளியின் கண்ணீரும்!

தூய்மை இந்தியா திட்டத்தை நீங்கள்தான் உயர்த்திப் பேசுகிறீர்கள்; ஆனால் எனக்கு 18 மாதங்களாக சம்பளம் வரவில்லை எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு துப்புரவு பணியாளர் கடிதம் எழுதியுள்ளார்.

"மொட்டைமாடியில நின்னு கைதட்டுனா காசு வந்துடுமா?"- மோடியின் வேண்டுகோளும் துப்புரவு தொழிலாளியின் கண்ணீரும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி, நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாடுமுழுவதும் பெரும் பரிதாபத்திற்குரிய நபர்களாக துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். பெரிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை கொரோனா காரணமாக வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பொதுசுகாதாரத்தை பாதுகாப்பத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தூய்மை பணியாளர்களை அப்படி வீட்டில் இருந்து பணியாற்றச் சொல்லமுடியாது. எவ்வளவு பெரிய பாதிப்பு வந்தாலும் அவர்களுடைய வழக்கமான பணிக்கு வீதிக்குத்தான் வரவேண்டும்.

"மொட்டைமாடியில நின்னு கைதட்டுனா காசு வந்துடுமா?"- மோடியின் வேண்டுகோளும் துப்புரவு தொழிலாளியின் கண்ணீரும்!

அதுவும் தற்போது நாடே முடங்கியுள்ள நிலையில் தினமும் எந்தவித பாதுகாப்பு உபரகரணமும் இல்லாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பணியாளர்களுக்கு முறையாக ஊதியமோ, சலுகைகளோ வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு, கடைநிலையில் பணியாற்றும் ஊழியர்களிடம் எவ்வளவு பாகுபாட்டோடு நடந்துகொள்கிறது என்பதற்கு இந்தச் செய்திக்குறிப்பில் வரும் நபரே உதாரணம்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். 1983-ம் ஆண்டும் முதல் தூய்மைப் பணியாளராக அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். ஆனால் இவ்வளவு ஆண்டுகள் பணியாற்றிய சுந்தர்ராஜ் தற்காலிக ஊழியர் என்பது வேதனைக்குரிய செய்தி.

தான் பணியில் சேர்ந்த ஆண்டில் இருந்து நிரந்தர ஊழியராக பணியாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார். ஆனால் அரசும், அதிகாரிகளும் அவரின் கோரிக்கையை ஒரு முறை கூட காதுகொடுத்துக் கேட்கவில்லை. இது பெரிய துயரம் என்றால் பணி நிறைவு அடையப்போகும் வருடத்தில், 18 மாதங்கள் வேலை செய்ததற்கான சம்பளப் பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளனர்.

"மொட்டைமாடியில நின்னு கைதட்டுனா காசு வந்துடுமா?"- மோடியின் வேண்டுகோளும் துப்புரவு தொழிலாளியின் கண்ணீரும்!

இதற்காக அவர் அளித்த மனு ஆட்சியர் அலுவலகம் முதல் தனிப்பிரிவு அதிகாரிகள் வரை சென்றுவிட்டது. இந்நிலையில், கடைசியாக தன்னுடைய மனுவை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். பிரதமருக்கு அனுப்பப்பட்ட மனுவில் தனது ஆதங்கத்தை முழுவதுமாக கொட்டித்தீர்த்துள்ளார் அவர்.

அதில், “தூய்மை இந்தியா திட்டத்தை நீங்கள்தான் உயர்த்திப் பேசுகிறீர்கள்; ஆனால் மிகக்குறைந்த சம்பளத்தில்தான் நான் துப்புரவு வேலை பார்க்கிறேன். ஆனாலும் நான் பணியாற்றும் இடத்தை மிகவும் தூய்மையாகத்தான் வைத்துள்ளேன். அதற்காக சம்பளத்தை அதிகப்படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை; 18 மாதங்களாக சம்பளமே வரவில்லை” என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தி வெளியானதை அடுத்து தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “எனக்கு இந்த அரசு கொடுக்கவேண்டிய 18 மாத சம்பளத்தை இன்னும் கொடுக்கல. மூன்று வேளை உணவுக்கே அல்லல்படுறோம்; 60 ரூபாய்க்கு சம்பளத்திற்கு சென்ற எனக்கு கடைசியாக 1,025 ரூபாய் தான் வந்தது.

"மொட்டைமாடியில நின்னு கைதட்டுனா காசு வந்துடுமா?"- மோடியின் வேண்டுகோளும் துப்புரவு தொழிலாளியின் கண்ணீரும்!

பள்ளியில் பணியாற்றுவதால் அதிகாரிகள் அனைவரிடமும் புகார் அளித்துள்ளேன். இதுவரை தரவேண்டிய ஊதியம் 18,450 ரூபாயை கொடுக்கவேண்டும். அந்த காசு இல்லாததால் கடன் வாங்கி பொழப்ப ஓட்டுறோம். அப்படி வாங்குன கடனே 20,000 தாண்டிருச்சு. அதனால்தான் எங்களோடு பணி மகத்தானது எனச் சொல்லும் மோடிக்கு கடிதம் அனுப்பினேன். பார்க்கலாம் இவரும் அதிகாரி மாதிரி இருக்காரா இல்லயானு” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை மக்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய பிரதமர் மக்களுக்கு நோய் அண்டாத வகையில் தூய்மை பணியில் ஈடுபடும் இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையும்.

அதைத் தவிர்த்துவிட்டு மொட்டைமாடியில் நின்று கைதட்டினால் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கை சரியாகிவிடுமா? அவர்கள் வீடுகளுக்கு காசு வந்துவிடுமா என சமூக ஆர்வலர்கள் கேள்விகளை முன்வைக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories