இந்தியா

என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை..ஏழை மக்களால் எப்படி நிரூபிக்க முடியும்? - கொந்தளித்த தெலங்கானா முதல்வர்

குடியுரிமை சட்டத்தால் இந்தியாவுக்கு இருக்கும் நன்மதிப்பு சரிந்து வருகிறது என தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவ் கூறியுள்ளார்.

என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை..ஏழை மக்களால் எப்படி நிரூபிக்க முடியும்? - கொந்தளித்த தெலங்கானா முதல்வர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி அரசு இயற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வப்போது இந்துத்வ பயங்கரவாதிகளை ஏவி பாஜக வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தி வந்தாலும் உரிமைக்காக நடக்கும் போராட்டத்தை நாட்டு மக்கள் இதுகாறும் கைவிடவில்லை.

டெல்லி, சென்னை, மேற்கு வங்கம் என இஸ்லாமிய பெண்கள் தலைமையில் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மோடி அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக தத்தம் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

பொன்பரப்பி சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 
பொன்பரப்பி சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 
stalin 

அவ்வகையில், தமிழகத்திலும் சிறுபான்மையினர் நலம் காக்க எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு தீர்மானம் இயற்றக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டை, மன்னடி, திருப்பூர், கடலூர் என பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நேற்று சிஏஏ, என்.பி.ஆர் குறித்து விவாதக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், “என்னிடமே பிறப்புச் சான்றிதழ் இல்லை. பிறகு எப்படி என் பெற்றோர் உள்ளிட்டோரின் பிறந்த தேதியை என்னால் நிரூபிக்க முடியும்?

என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை..ஏழை மக்களால் எப்படி நிரூபிக்க முடியும்? - கொந்தளித்த தெலங்கானா முதல்வர்

நான் பிறந்த சமயத்தில் மருத்துவமனைகள் என ஏதும் கிடையாது. பிறந்த தேதியை வெறும் காகிதத்தில்தான் எழுதிக்கொடுத்தார்கள். இப்படி இருக்கையில் ஏழை எளிய மக்களிடமும், பழங்குடியினர்களிடமும் எப்படி பிறந்த தேதியை நிரூபிக்கச் சொல்ல முடியும்?

இந்த சட்டங்கள் மிகவும் எரிச்சலூட்டும் வகையில் உள்ளது. இது இந்திய அரசியலமைப்புக்கு எதிரான ஒன்று. சிஏஏ போன்ற சட்டத்தால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்து வருகிறது. தெலங்கானா சட்டப்பேரவையில் விரைவில் இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும். அனைத்து மாநிலங்களும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

banner

Related Stories

Related Stories