தமிழ்நாடு

“CAA-வுக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராடவேண்டிய தருணமிது” - வண்ணாரப்பேட்டையில் டி.எம்.கிருஷ்ணா பேச்சு!

டெல்லியில் நடந்த வன்முறை திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது என கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா குற்றஞ்சாட்டியுள்ளார்.

“CAA-வுக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராடவேண்டிய தருணமிது” - வண்ணாரப்பேட்டையில் டி.எம்.கிருஷ்ணா பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையின் ஷாஹீன்பாக் என அழைக்கப்படும் வண்ணாரப்பேட்டை பகுதியில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 18வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டும், தேசியக்கொடிகளை ஏந்தியும் போராடி வருகின்றனர். மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அவ்வப்போது, கலை நிகழ்ச்சிகளை நடத்தியும், இந்துக்கள், இஸ்லாமியர்களுக்கு திருமணம், வளைகாப்பு என்பனவற்றையும் நடத்தி வருகின்றனர்.

“CAA-வுக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராடவேண்டிய தருணமிது” - வண்ணாரப்பேட்டையில் டி.எம்.கிருஷ்ணா பேச்சு!

இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று 17வது நாள் போராட்டத்தின் போது பங்கேற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சி.ஏ.ஏவுக்கு எதிராக போராடும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

பின்னர், மக்கள் முன்னிலையில் பேசிய அவர், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர் போன்ற சட்டங்கள் அனைத்தும் பெரும் சூழ்ச்சியைக் கொண்டது. இந்த சட்டங்களால் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, சிறுபான்மையின, தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, ஒவ்வொரு குடிமகனும் இந்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்கவேண்டும்.

“CAA-வுக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராடவேண்டிய தருணமிது” - வண்ணாரப்பேட்டையில் டி.எம்.கிருஷ்ணா பேச்சு!

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் இளைஞர்கள். ஆனால், அந்த இளைஞர்களைக் கொண்டே வன்முறையை நிகழ்த்தும் வகையில் ஆட்சியாளர்கள் பேசி வருவது கண்டனத்திற்குரியது. டெல்லியில் நடந்தது திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட வன்முறை. ஜனநாயகத்தை வென்றுவிடலாம் என மோடியும், அமித்ஷாவும் எண்ணுகிறார்கள். ஆனால் ஜனநாயகமே இறுதியில் வெல்லும்.” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories