இந்தியா

Corona: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43ஆக உயர்வு - வெளிநாடுகளுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் இந்தியாவில் 43ஆக உயர்ந்துள்ளது.

Corona: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43ஆக உயர்வு - வெளிநாடுகளுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட்-19 எனும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் பரவி மக்களை நாள்தோறும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் உலகளவில் சந்தை நிலவரங்கள் அதலபாதாளத்துக்குச் சென்றிருக்கின்றன.

இதுவரை லட்சக்கணக்கான மக்கள் இந்த கொரோனா வைரஸ் நோய்க்கு ஆட்பட்டு அவதியுற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை மூவாயிரத்தைக் கடந்துள்ளது. இத்தாலியில் மட்டும் ஒரு நாளிலேயே 100 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அந்நாட்டில் கொரோனா அறிகுறியுடன் ஆயிரக்கணக்கானோர் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Corona: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43ஆக உயர்வு - வெளிநாடுகளுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!

இதில், இத்தாலியில் இருந்து இந்தியா வந்த பலருக்கு தொற்று இருந்திருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் மீண்டும் கணக்கை தொடங்கியிருக்கிறது கொரோனா வைரஸ். ஏற்கெனவே கேரளாவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டு முறையான சிகிச்சையளிக்கப்பட்டதால் அவர்கள் குணமாகினர்.

தற்போது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் இந்தியாவை சூழ்ந்துள்ளது. அதில், டெல்லி, தெலங்கானாவைச் சேர்ந்த இருவருக்கும், இத்தாலியில் இருந்து வந்த 16 பேர் மற்றும் டிரைவருக்கும் கொரோனா இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கேரளாவில் மீண்டும் 9 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஒருவர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

Corona: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43ஆக உயர்வு - வெளிநாடுகளுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!

இந்நிலையில், புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறி வருகிறது.

மேலும், அத்தியாவசியமின்றி மக்கள் வெளிநாடுகளுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ செல்ல வேண்டாம் எனவும், வீட்டிலும், பொதுவெளியிலும் சுகாதாரத்தை பேணவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதல் அதிகரிப்பதையடுத்து, சென்னையில் இன்று இரண்டாவது நாளாக பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹாங்காங்கிலிருந்து சென்னை வந்து செல்லும் கதே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம், குவைத்திலிருந்து சென்னை வந்து செல்லும் குவைத் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட 10 விமானங்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories