இந்தியா

“இந்தியாவின் நிலை வேதனையளிக்கிறது” : டெல்லி வன்முறை குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் ஆதங்கம்!

காந்தியின் ஆன்மா முன்பைவிட இப்போது அதிகம் தேவைப்படுகிறது என ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

 ஐ.நா பொது செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ்
ஐ.நா பொது செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் போராடியவர்கள் நடத்திய வன்முறையால் வடகிழக்கு டெல்லியில் பெரும் மோதல் வெடித்தது. இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மத மோதலில் இஸ்லாமியர்களின் மசூதிகள், வீடுகள், கடைகள் ஆகியவை சூறையாடப்பட்டுள்ளன.

இந்த வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கலவரம் ஏற்பட்டுள்ள டெல்லியின் நிலைமை கவலை அளிப்பதாகவும், வன்முறையை உன்னிப்பாக ஐ.நா. கவனிப்பதாகவும் ஐ.நா-வின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார். இந்நிலையில் ஐ.நா.பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டெரஸ் கூறியதாவது, “டெல்லி கலவரத்தில் மக்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இந்தியாவின் நிலைமையையும் நான் கவனித்து வருகின்றேன்.

“இந்தியாவின் நிலை வேதனையளிக்கிறது” : டெல்லி வன்முறை குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் ஆதங்கம்!

குறிப்பாக கடந்த சில நாட்களாக நாங்கள் கேள்விப்பட்ட மரணங்கள் குறித்து செய்திகளால் மிகவும் வருத்தப்படுகிறோம். வன்முறை தவிர்க்கப்படவேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகிறேன்.

எனது வாழ்நாள் முழுவதும் மகாத்மா காந்தியின் போதனைகளை கேட்டு அதில் ஆழமாக ஈர்க்கப்பட்டவன். எனவே உண்மையான சமூக நல்லிணக்கத்திற்கான நிலைமைகளை உருவாக்குவது என்பது அவசியமானது. காந்தியின் ஆன்மா முன்பைவிட இப்போது அதிகம் தேவைப்படுகிறது.

போராட்டக்காரர்கள் அமைதியான வழியில் போராட அனுமதியளிக்கவேண்டும். பாதுகாப்பு படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories