இந்தியா

“திணறிவரும் இந்திய பொருளாதாரம் : 3வது காலாண்டிலும் ஜி.டி.பி 4.7% தான்” : மோடி ஆட்சியால் மக்கள் வேதனை!

நடப்பு 2019-2020ம் நிதியாண்டுக்கான மூன்றாவது காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.7% என இந்திய அரசு அறிவித்துள்ளது.

“திணறிவரும் இந்திய பொருளாதாரம் : 3வது காலாண்டிலும் ஜி.டி.பி 4.7% தான்” : மோடி ஆட்சியால் மக்கள் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியப் பொருளாதாரம், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக மோசமான பாதிப்புகளை கடந்த ஒரு வருடமாக சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 5.1 சதவீதமாக மட்டுமே உள்ளது.

இந்நிலையில், மத்திய புள்ளியியல் அலுவலகம் ஜி.டி.பி புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், இந்திய பொருளாதாரம் 2019 அக்டோபர் - டிசம்பர் வரையான 3வது காலாண்டில் 4.7 சதவீதமாக இருப்பதாக அரசு தகவல் அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஜனவரியில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உர வகைகளின் உற்பத்தி சுருங்கிவிட்டதாகவும், வேளாண்மை, கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் எந்த குறிப்பிட்ட முன்னேற்றமும் மூன்றாவது காலாண்டில் உண்டாகவில்லை என அரசு தகவல் அளித்துள்ளது.

“திணறிவரும் இந்திய பொருளாதாரம் : 3வது காலாண்டிலும் ஜி.டி.பி 4.7% தான்” : மோடி ஆட்சியால் மக்கள் வேதனை!

கடந்த காலாண்டைவிட ஓரளவு அதிகரித்தாலும் அடுத்துவரும் நான்காவது காலாண்டின் 4.7 சதவீதம் என்பது இன்னும் குறையும் என கூறப்படுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகளில் உண்டாகியுள்ள பொருளாதார சரிவுகள் ஏற்படுத்திய தாக்கங்கள் கடைசி காலாண்டில் எதிரொலிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் 2019-2020ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக அதிகரிக்கும் எனக் கூறிய மோடி அரசின் விருப்பம் நிறைவேறுவது சாத்தியமில்லாததே எனக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories