இந்தியா

#DelhiBurns : பள்ளியில் குண்டு வீசிய மதவாத குண்டர்கள் - புத்தகங்கள் எரிந்து சாம்பலான சோகம்!

பள்ளி ஒன்றின் மீது வன்முறையாளர்கள் குண்டு வீசியதால் நூற்றுக்கணக்கான பாடப் புத்தகங்கள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளது.

#DelhiBurns : பள்ளியில் குண்டு வீசிய மதவாத குண்டர்கள் - புத்தகங்கள் எரிந்து சாம்பலான சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சி.ஏ.ஏவுக்கு எதிராகப் போராடுவர்களை அழிக்கவேண்டும் என பா.ஜ.கவின் முன்னாள் எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா பேசியதற்கு பிறகு, வடகிழக்கு டெல்லியே போர்க்களமானது. இஸ்லாமியர்களைத் தேடித்தேடி, வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினர் பா.ஜ.கவின் இந்துத்வ குண்டர்கள்.

இது டெல்லி மக்களை மட்டுமல்லாது, சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரண்டு நாட்களாக நடந்த இந்த வன்முறை வெறியாட்டத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள், பள்ளிவாசல்கள், கடைகள் என அனைத்தையும் மதவாத கும்பல் சூறையாடியது. இந்த தாக்குதலால் இதுவரை 35 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

#DelhiBurns : பள்ளியில் குண்டு வீசிய மதவாத குண்டர்கள் - புத்தகங்கள் எரிந்து சாம்பலான சோகம்!

கடந்த செவ்வாயன்று, வடகிழக்கு டெல்லியின் பிர்ஜிபுரியில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றின் மீது, காவி பயங்கரவாத கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதில், பள்ளியில் உள்ள புத்தகங்கள், தேர்வு எழுதிய தாள், ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் கருகிச் சாம்பலாகின.

நல்வாய்ப்பாக, பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தேர்வு காலையிலேயே முடிந்துவிட்டதால் அங்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. வன்முறையாளர்கள் குண்டு வீசிய சமயத்தில் பள்ளி அருகே 200-க்கும் மேலானோர் சுற்றி வளைத்து நின்ற நிலையில், அந்தப் பள்ளியின் செக்யூரிட்டி மட்டும் எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.

#DelhiBurns : பள்ளியில் குண்டு வீசிய மதவாத குண்டர்கள் - புத்தகங்கள் எரிந்து சாம்பலான சோகம்!

பள்ளியில் மாலை 4 மணிக்கு எரியத்தொடங்கிய தீ சுமார் 4 மணிநேரம் வரை நீடித்திருக்கிறது. போலிஸ், தீயணைப்புத் துறையை அழைத்தபோது எவருமே வரவில்லை என அந்தப் பள்ளியின் பெண் கணக்காளர் நீத்து சவுத்ரி கூறியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், பள்ளிக்குள் நுழைந்த வன்முறையாளர்கள் எஞ்சியிருந்த ஆவணங்கள் அனைத்தையும் வீசி எறிந்தனர். அதேபோல, கேன்டீனுக்குச் சென்று அங்கிருந்த பொருட்களையும் சூறையாடியதோடு, பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளிப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை எரித்தனர் என நீத்து சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவங்களால் டெல்லி மக்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories