இந்தியா

“தனக்கு கிடைத்த விருதை தானே அறிவித்த செய்தி தொகுப்பாளர்” : நேரலையில் நடந்த சுவாரஸ்யம்! - VIDEO

தனக்கு அறிவிக்கப்பட்ட விருதை செய்தித் தொகுப்பாளர் ஒருவர் தானே நேரலையில் செய்தியாக வாசித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தனக்கு கிடைத்த விருதை தானே அறிவித்த செய்தி தொகுப்பாளர்” : நேரலையில் நடந்த சுவாரஸ்யம்! - VIDEO
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த செய்தி தொகுப்பாளர்களுக்கு விருது வழங்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விருது மாத்ருபூமி செய்தி தொலைக்காட்சி ஊடகத்தில் தலைமை உதவி ஆசிரியராகப் பணிபுரியும் ஸ்ரீஜா ஷியாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியானபோது ஸ்ரீஜா ஷியாம் தான் பணியாற்றும் மாத்ருபூமி தொலைக்காட்சியில் நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் இந்த தகவலை அவருக்குத் தெரிவிக்காத நிலையில், வழக்கம் போல செய்தி வாசிப்பதற்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் திரையை நோக்கியவாறு செய்தி வாசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, கேரள அரசின் சிறந்த செய்தித் தொகுப்பாளர் விருது மாத்ருபூமி ஊடகத்தின் தலைமை உதவி ஆசிரியர் ஸ்ரீஜா ஷியாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற ‘பிரேக்கிங் செய்தி’யை வாசித்தார்.

தனக்கு அறிவிக்கப்பட்ட விருதை வாசிக்கமுடியாமல் சற்று தயங்கிய நிலையில் சிறிய சிரிப்புடன் மீண்டும் மகிழ்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு அடுத்த செய்தியைத் தொடர்ந்தார் ஸ்ரீஜா. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories