இந்தியா

“புறக்கணிக்கப்படும் பெண் இயக்குநர்கள்” : ஆஸ்கர் விழாவில் தனது ஆடை மூலம் எதிர்ப்பு தெரிவித்த நடிகை!

ஆஸ்கர் விழாவில் பெண் இயக்குநர்கள் புறக்கணிக்கப்பட்டதாக நடிகை நடாலி போர்ட்மென் தெரிவித்த கண்டனம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“புறக்கணிக்கப்படும் பெண் இயக்குநர்கள்” : ஆஸ்கர் விழாவில் தனது ஆடை மூலம் எதிர்ப்பு தெரிவித்த நடிகை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முன்னணி திரைப்படக் கலைஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஜோக்கர், பாரசைட், 1917 உள்ளிட்ட 9 படங்கள் சிறந்த படங்களுக்கான நாமினேஷனில் இடம்பெற்றன. அதுமட்டுமின்றி, பெண் இயக்குநர்கள் பிரிவில் 5 பெண் இயக்குநர்கள் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டன.

பல பெண் இயக்குநர்கள் பெயர்களின் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பரிந்துரைக்கப்பட்ட 5 பேரில் கேத்ரின் பிகிலோ என்ற பெண் இயக்குநருக்கு மட்டும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த நடிகர்கள், இயக்குநர்கள் ஆஸ்கர் தேர்வுக்குழுவை விமர்சனம் செய்து வந்தனர். அந்த வகையில் பெண் இயக்குநர் என்பதாலேயே ஆஸ்கரில் புறக்கணிக்கப்படுவதாக கருத்துத் தெரிவிக்கும் விதமாக நடிகை நடாலி போர்ட்மென் புறக்கணிக்கப்பட்ட பெண் இயக்குநர்களின் பெயர்களை தனது ஆடையில் தைத்து விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அவரது ஆடை தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் நடிகை நடாலி போர்ட்மெனின் இந்தச் செயலுக்கு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். கடந்தாண்டும் ஆஸ்கர் பட்டியலில் ஆண்களின் பெயர்கள் மட்டும்தான் இருப்பதாக நடாலி போர்ட்மென் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories