இந்தியா

“டெல்லி மக்கள் சோம்பேறிகள்”: பா.ஜ.க.,வுக்கு ஓட்டுப் போடாத மக்களைத் திட்டிய தொலைக்காட்சித் தொகுப்பாளர் !

பால்கோட் வான்வழித் தாக்குதல்கள், காஷ்மீர் விவகாரம், ராமர் கோவில் பற்றி டெல்லி மக்கள் கவலைப்படவில்லை என்று பா.ஜ.க சார்பு தொகுப்பாளர் சுதிர் சவுத்ரி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“டெல்லி மக்கள் சோம்பேறிகள்”: பா.ஜ.க.,வுக்கு ஓட்டுப் போடாத மக்களைத் திட்டிய தொலைக்காட்சித் தொகுப்பாளர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பரபரப்புக்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது, 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கடும் பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த 2015-ல் அக்கட்சி பெற்ற 67 இடங்களைக் காட்டிலும் 18 தொகுதிகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.கவை பொறுத்தளவில் 20 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்த கருத்துக் கணிப்பு தங்களுக்கு சாதமாகவில்லை பா.ஜ.க.,வினர் கடும் கொந்தளிப்பிலும் அதிர்ச்சியிலும் இருக்கின்றனர். தேசிய தலைவர்கள் மத்தியிலும் டெல்லி தோல்வி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க.,விற்கு ஓட்டுபோடாத மக்களை அக்கட்சியின் நாலந்தரப் பேச்சாளராக மாறி தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஒருவர் விமர்சனம் செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.

“டெல்லி மக்கள் சோம்பேறிகள்”: பா.ஜ.க.,வுக்கு ஓட்டுப் போடாத மக்களைத் திட்டிய தொலைக்காட்சித் தொகுப்பாளர் !

ஜி செய்தி தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றுபவர் சுதிர் சவுத்ரி. தேர்தல் முடிவுகள் குறித்து நேரலையில் செய்தி நேரலையில் பேசிய சுதிர் சவுத்ரி, “டெல்லி மக்கள் பால்கோட் வான்வழித் தாக்குதல்கள், அயோத்தியில் உள்ள ராம் கோயில் விவகாரம் அல்லது ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது பற்றி கவலைப்படுவதில்லை.

நாடு பிரிக்கப்படுவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்கள் உள்ளூர் போராட்டங்களில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பெரிய பிரச்சினைகளைப் பற்றி அக்கறை அவர்களுக்கு இல்லை.

அதுமட்டுமின்றி, டெல்லி மக்கள் சோம்பேறிகள். அவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் வழியாக மட்டுமே தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள், வாக்களிக்க வெளியே வர விரும்பவில்லை” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

தொகுப்பாளரின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மேலும் தொகுப்பாளர் பா.ஜ.க நபராக மாறியிருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் கேலி செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories