இந்தியா

“சொத்து மதிப்பே வெறும் ‘ஜீரோ’தான்” : லண்டன் நீதிமன்றத்தில் கைவிரித்த அனில் அம்பானி !

தொழிலதிபர் அனில் அம்பானி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த வழியில்லை எனத் தெரிவித்துள்ளார்.

“சொத்து மதிப்பே வெறும் ‘ஜீரோ’தான்” : லண்டன் நீதிமன்றத்தில் கைவிரித்த அனில் அம்பானி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி. அவருடைய ரிலையன்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மோடி அரசு தொடர்ந்து சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

இதனால் முகேஷ் அம்பானி அனைத்து தொழில்களிலும் லாபத்தை சம்பாதித்து இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் அவரது சகோதரர் அனில் அம்பானியின் தலைமையின் கீழ் இயங்கும் அனில் திருபாய் அம்பானி குழும தொழில்கள் அனைத்தும் சமீபகாலமாக நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

மேலும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனமும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கிளை அமைப்பாகச் செயல்படும் ஜி.சி.எக்ஸ் - GCX நிறுவனமும் கடும் சரிவை சந்தித்துள்ளன.

“சொத்து மதிப்பே வெறும் ‘ஜீரோ’தான்” : லண்டன் நீதிமன்றத்தில் கைவிரித்த அனில் அம்பானி !

அதிலும் குறிப்பாக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் அடையும் நிலைக்குச் சென்றதால், அந்நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.

தொடர்ந்து நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறிவந்த அனில் அன்பானிக்கு மீண்டும் ஒரு நெருக்கடி உருவாகியுள்ளது. அதிலும் இந்தமுறை தான் பணக்காரர் அல்ல என்று சொல்லும் அளவிற்கு அவர் ஆளாகியுள்ளார்.

முன்னதாக, கடனை திருப்பி அளிப்பதற்காக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஐ.சி.பி.சி., சீனா டெவல்ப்மெண்ட் பேங்க் மற்றும் எக்ஸ்போர்ட் சீனா, இம்போர்ட் பேங்க் ஆப் சீனா ஆகிய மூன்று வங்கிகளிடம் கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தொழில் நஷ்டம் காரணமாக 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், அனில் அம்பானி கடன் பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. கடனைச் செலுத்தாமல் தாமதபடுத்திவந்த அனில் அம்பானிக்கு எதிராக 3 சீன வங்கிகளும் பிரிட்டன் தலைநகரில் உள்ள லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

“சொத்து மதிப்பே வெறும் ‘ஜீரோ’தான்” : லண்டன் நீதிமன்றத்தில் கைவிரித்த அனில் அம்பானி !

இதனையடுத்து, வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், கடன் கொடுத்துள்ள சீன வங்கிகளுக்கு, குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும் என்றும் வழக்கு விசாரணையைச் சந்திக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு அனில் அம்பானி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகையை இறுதி செய்வதற்கான விசாரணை, பிப்ரவரி 7ம் தேதி நடக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்றைய தினம் நடைபெற்ற இந்த வழக்கை நீதிபதி டேவிட் வாக்ஸ்மேன் விசாரித்தார்.

அப்போது அனில் அம்பானி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, “பணத்தை திரும்பச் செலுத்தும் வகையில் அவருக்கு சொத்து இல்லை. 2012-ல் 7 பில்லியன் டாலர்களாக இருந்த அவரது முதலீடுகள் தற்போது 89 மில்லியன் டாலர்களாக சரிந்துள்ளன. அவரது கடன்களை கணக்கில் கொண்டால் அவரது நிகர மதிப்பு இப்போது பூஜ்ஜியம்தான். ஒரு காலத்தில் மாபெரும் பணக்காரரராக இருந்தார்.ஆனால், இப்போது அப்படியில்லை” என வாதாடினர்.

இதனையடுத்து வங்கியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனில் அம்பானி இந்தியாவில் சொகுசு வாழ்க்கையைத்தான் வாழ்கிறார். அவருக்கு 11 ஆடம்பர சொகுசுக் கார்கள், ஒரு தனி விமானம், தெற்கு மும்பையில் சொகுசு பங்களா ஆகியவை இருக்கின்றன என்று வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்தியாவில் அனில் அம்பானி திவால் நோட்டீஸ் தாக்கல் செய்தாரா என கேள்வி எழுப்பிவிட்டு, இந்த வழக்கில் பணம் தரமுடியாது என்ற அம்பானி சார்பில் சொல்லப்பட்ட வாதங்களை நிராகரித்தார். மேலும், 715 கோடி ரூபாயை முன்பணமாக ஆறு வார காலத்துக்குள் செலுத்தவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

முன்னதாக மற்றொரு பிரச்னையில் எரிக்சன் நிறுவனத்திற்கு தர வேண்டிய தொகையை செலுத்தத் தவறினால் சிறை செல்ல நேரிடும் என அனில் அம்பானியை உச்சநீதிமன்றம் எச்சரித்தது. அப்போது அவரது சகோதரர் முகேஷ் அம்பானி தலையிட்டு அனில் அம்பானியை காப்பாற்றினர். இந்த முறை தம்பியை காப்பாற்றுவாரா அம்பானி என்ற கேள்வி எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories