இந்தியா

#DelhiElection : குடியுரிமை சட்டத்தின் எதிர்ப்பால் வீழ்ச்சியை சந்தித்த பா.ஜ.க? : என்ன சொல்கிறது #ExitPoll

டெல்லியில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. டெல்லியில் கடும்குளிர் நிலவியதால் மந்தமான நிலையிலேயே தொடர்ந்த வாக்குப்பதிவால், பிற்பகல் 2 மணிவரை 30 சதவிகித வாக்குகளே பதிவாகியிருந்தது.

அதன் பின்னர், வாக்குச்சாவடிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, பிற்பகல் 3.30 மணிவரை 45 சதவிகித வாக்குகள் பதிவானது. மாலை 6 மணி நிலவரப்படி 57 சதவிகித வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பதிவான வாக்குகள் வருகிற 11ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகும்.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புபடி மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியே டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#DelhiElection : குடியுரிமை சட்டத்தின் எதிர்ப்பால் வீழ்ச்சியை சந்தித்த பா.ஜ.க? : என்ன சொல்கிறது #ExitPoll

TimesNow கருத்து கணிப்பின்படி, 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 44 இடங்களையும், பா.ஜ.க 26 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. NewsX வெளியிட்டுள்ள கணிப்பில் ஆம் ஆத்மி 53 முதல் 57 இடங்களையும், பா.ஜ.க 11 முதல் 17 இடங்களையும் காங்கிரஸ் 0 முதல் 2 இடங்களையும் பெறும் என கூறியுள்ளது.

அதனையடுத்து, ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி 48 முதல் 61 தொகுதிகளையும், பா.ஜ.க 9 முதல் 21 தொகுதிகளையும், காங்கிரஸ் 0 முதல் 1 தொகுதியையும் பிடிக்கும் என கணித்துள்ளது.

இந்தியா நியூஸ் நேஷன் நிறுவனத்தின் கணிப்பின் படி, ஆம் ஆத்மி 55 இடங்களையும், பா.ஜ.க 14 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடங்களையும் கைப்பற்றும் என கூறியுள்ளது.

அதேபோல, டிவி9 கருத்து கணிப்பின் படி, ஆம் ஆத்மி 54 இடங்களையும், பா.ஜ.க 15 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் பிடிக்கும் என கூறப்படுகிறது.

பா.ஜ.க ஆதரவு ஊடகங்களில் கூட ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், டெல்லியில் தனது பலத்தை பா.ஜ.க இழந்துள்ளது தெளிவாகி உள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியை கைப்பற்றும் என்பது தெரியவருகிறது.

இதற்கு, பா.ஜ.க அரசு மேற்கொண்டு வந்த பல சட்டத்திருத்தங்களே காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலை, அடுத்தடுத்து வரப்போகும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தொடரும் என்றும், விரைவில் பா.ஜ.க தனது வீழ்ச்சியை சந்திக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories