இந்தியா

“ஷாஹீன்பாக்கில் உள்ளவர்கள் தற்கொலைப்படையினர்” : #CAA போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்தும் பா.ஜ.க அமைச்சர்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறும் ஷாஹீன் பாக்கில் உள்ளவர்கள் தற்கொலைப் படையினர் என்று மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஷாஹீன்பாக்கில் உள்ளவர்கள் தற்கொலைப்படையினர்” : #CAA போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்தும் பா.ஜ.க அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள ஷாஹீன் பாக்கில் பெண்கள் தலைமையில் 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க பா.ஜ.க மற்றும் இந்துத்வா கும்பல்கள் பல்வேறு அவதுறுகளைப் பரப்பி சதித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் கூட டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்பொது பேசிய மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்களை சுடவேண்டும் என்று வன்முறையைத்தூண்டும் வைகையில் பேசினார்.

அவரது அந்தப் பேச்சின் எதிரொலியாக பா.ஜ.க ஆதரவாளர் ஒருவர் டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும், மற்றொருவர் ஷாஹீன் பாக்கில் துப்பாக்கியுடன் வந்து போராட்டக்காரர்களை மிரட்டிய சம்பவமும் நடைபெற்றது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் மக்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார் மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங். இவர் ஷாஹீன் பாக் போராட்டம் குறித்து வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “இந்த ஷாஹீன் பாக் ஒரு இயக்கம் அல்ல. அங்கு தற்கொலைப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டின் தலைநகரில் நாட்டிற்கு எதிராக ஒரு சதி நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி முன்னதாக பா.ஜ.க தலைவர்கள் பலரும் ஷாஹீக் பாக்கில் நடைபெறும் போராட்டத்தை கலைக்கவேண்டும் எனவும் டெல்லியில் பா.ஜ.க ஆட்சி வந்ததும் அதைச் செய்வோம் எனவும் மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். இதன்தொடர்சியாக கிரிராஜ் சிங் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சருக்கு எதிராக அரசியல் கட்சியினர் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories