இந்தியா

சமூக வலைத்தளங்களில் பெண் குறித்து அவதூறு கருத்து : இந்து மகா சபா ஊழியர்கள் 2 பேர் கைது - போலிஸ் அதிரடி!

பெண் ஒருவரை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய இந்து மகா சபாவைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பெண் குறித்து அவதூறு கருத்து : இந்து மகா சபா ஊழியர்கள்  2 பேர் கைது - போலிஸ் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அகில இந்திய இந்து மகா சபாவின் முன்னாள் பொதுச் செயலாளர் நிரஞ்சனி என்பவர், கடந்த வாரம் அந்த அமைப்பின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற ஸ்ரீ காந்த் மீது பாலியல் புகார் கொடுத்தார்.

அமைப்பின் பொதுச்செயலாளராக இருக்கும் போது தன்னை பாலியல் தொல்லைக் கொடுத்ததாகவும், தன்னை துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும் காவல்நிலையத்தில் அளித்தப் புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் கோடம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் நிரஞ்சனி மீண்டும் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில், அகில இந்திய இந்து மகா சபா நிறுவனர் கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் அவரது ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

கோடம்பாக்கம் ஸ்ரீ
கோடம்பாக்கம் ஸ்ரீ

ஏற்கெனவே அவர்கள் மீது புகார் கொடுத்த நிலையில், என்னை அச்சுறுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அமைப்பின் தலைவர் ஸ்ரீகாந்தின் கார் ஓட்டுநர்கள் ஜெய் பாலாஜி, நடராஜன் ஆகிய இருவரும் நிரஞ்சனி குறித்து அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்யத போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதில் ஸ்ரீகாந்த் தலையீட்டின் காரணமாக நிரஞ்சனியை மிரட்டினார்களா? என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணையை துவங்கியுள்ளார்.

இந்துத்துவா கும்பல் மற்றும் இந்து அமைப்பினர்களால் தொடர்ந்து பெண்கள் பல்வேறு தாக்குதலுக்கு ஆளாவது தொடர்கதையாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories