இந்தியா

பட்ஜெட் தாக்கலாகும்போதே சரிந்த பங்குச்சந்தை : மீள்வது சாத்தியமா? - நிபுணர்கள் சொல்லும் காரணம்!

பட்ஜெட்டின் சில மோசமான அம்சங்களால் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட் தாக்கலாகும்போதே சரிந்த பங்குச்சந்தை : மீள்வது சாத்தியமா? - நிபுணர்கள் சொல்லும் காரணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பா.ஜ.க அரசு நடப்பு நிதியாண்டுக்கான (2020-2021) பட்ஜெட் அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வீழத் தொடங்கிய பங்குச் சந்தை, பட்ஜெட் வாசிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே 1,000 புள்ளிகள் சரிந்தது.

நிதியமைச்சரின் பட்ஜெட் அறிவிப்புகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறத் தவறிவிட்டன. அதனால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டு நிஃப்டி 11,650 ஐ விடக் குறைந்தது.

பட்ஜெட் அறிவிப்பில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலான அம்சங்கள் இல்லாததே இந்தச் சரிவுக்கு காரணம் என நிபுணர்கள் கூறிவருகின்றனர். மேலும் பட்ஜெட்டில் மோசமான சில அம்சங்கள் இருப்பதால இனி பங்குச் சந்தை உயர்வு என்பது கடினமே எனவும் கூறியுள்ளனர்.

பட்ஜெட் தாக்கலாகும்போதே சரிந்த பங்குச்சந்தை : மீள்வது சாத்தியமா? - நிபுணர்கள் சொல்லும் காரணம்!

மேலும், பட்ஜெட்டின் சில அம்சங்களே பங்குச் சந்தை சரிவுக்கு காரணம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பட்ஜெட்டில் எந்தவொரு துறையிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கான சலுகைகள் இல்லை. குறிப்பாக ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளுக்கான திட்டங்கள் தற்போதைய மந்தநிலையிலிருந்து பொருளாதாரத்தை உயர்த்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவை நடக்கவில்லை.

குளறுபடி 1 : வருமான வரியில் அடுக்கடுக்கான குழப்பம்

பட்ஜெட் அறிக்கையில் உள்ள பிரிவு 80சி-யின் கீழ் உள்ள அனைத்து விதிவிலக்குகளையும் நீக்குவதில் சில ஏமாற்றங்கள் இருந்தன. மேலும் பழைய மற்றும் புதிய வருமான வரி வடிவங்களுக்கு இடையில் தேர்வு செய்வதற்கான விருப்பத்தை வழங்கும் விஷயங்கள் மிகவும் சிக்கலானவையாக அமைந்துள்ளது.

குளறுபடி 2 : எல்.டி.சி.ஜி மறுபரிசீலனை இல்லை!

நீண்ட கால மூலதன ஆதாய வரிக்கு ( எல்.டி.சி.ஜி (long-term capital gains tax -LTCG)) சில மாற்றங்களை நிதியமைச்சர் செய்வார் என்று பங்குச் சந்தைகள் பெரும்பாலும் எதிர்பார்க்கிறது. குறிப்பாக, அரசாங்கம் பங்குகளுக்கான வரியை ரத்து செய்யும் அல்லது பங்குகள் தொடர்பான பதவிக் காலத்தை ஒன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அத்தகைய அறிவிப்பு எதுவும் இல்லை.

பட்ஜெட் தாக்கலாகும்போதே சரிந்த பங்குச்சந்தை : மீள்வது சாத்தியமா? - நிபுணர்கள் சொல்லும் காரணம்!

14 வருட இடைவெளிக்குப் பிறகு எல்.டி.சி.ஜியை அரசாங்கம் 2018ல் மீண்டும் அறிமுகப்படுத்தியது. வரி வசூலில் அதிகரிப்பு இல்லாமல் இருந்தது ஒரு குறிப்பிடத்தக்க குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளறுபடி 3 : விலக்கு வருவாய் அதிகம்!

இந்த ஆண்டில் கொடுக்கப்பட்டுள்ள விலக்கு வருமானம் பட்ஜெட் இலக்கை விட மிகக் குறைவாக இருக்கும். எல்.ஐ.சி பங்கு விற்பனையை உள்ளடக்கியிருந்தாலும் கூட, நிதியாண்டு 2021-க்கு ரூ.2.10 லட்சம் கோடி வருமான இலக்கு என்பது சற்று அதிகமாக உள்ளது.

குளறுபடி 4 : பெறுநருக்கு அதிக டிவிடெண்ட் வரி (Dividend - லாபப்பங்கு)

டிவிடெண்ட் விநியோக வரியை (dividend distribution tax - DDT) ரத்து செய்வதாக நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்தார். இது ரூ.25,000 கோடி வருவாய்க்கு வழிவகுக்கும். ஆனால், இப்போது பெரு முதலீட்டாளர்கள் மிக அதிகமாக வரி செலுத்தும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். இது உள்நாட்டு முதலீட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories