இந்தியா

”29-ம் தேதி கொலை படலம் தொடங்கும்” - பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு இந்துத்வா கும்பல் மிரட்டல்!

நடிகர் பிரகாஷ் ராஜ், சி.பி.ஐ.(எம்) தலைவர் பிருந்தா காரத், முன்னாள் முதல்வர் ஹெச்.டி குமாரசாமி உள்ளிட்ட 29 பேருக்கு இந்துத்வா கும்பல் கொலைமிட்டல் விடுத்துள்ளது.

”29-ம் தேதி கொலை படலம் தொடங்கும்” - பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு இந்துத்வா கும்பல் மிரட்டல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசை விமர்ச்சிப்பவர்கள் மீதான அச்சுறுதல்களும், தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மோடி அரசு ஆட்சி அதிகாரித்திற்கு வந்ததில் இருந்து மக்கள் விரோத நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

அதனை எதிர்ப்பவர்கள் மற்றும் அதற்கு எதிராக வலுவான போராட்டத்தில் ஈடுபடுவர்களை வலதுசாரி அமைப்புகள் மற்றும் இந்துத்வா அமைப்புகள் அச்சுறுத்தியும் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். அப்படி கடந்த காலங்களில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், முற்போக்குவாதி நரேந்திர தபோல்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கோவிந்த் பன்சாரே உள்ளிட்டோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவருமே பாஜக அரசின் இந்துத்வா கொள்கைகளை கடுமையாக எதிர்த்தவர்கள். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பா.ஜ.க அரசை எதிர்ப்பவர்களை கொலை செய்வோம் என்று மிரட்டல் கடிதம் ஒன்று வெளியாகி பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், முன்னாள் முதல்வர் ஹெச்.டி குமாரசாமி ஆகியோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல் விடப்பட்ட அந்த கடிதத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “ 15 பேரை கொல்வதற்கு நல்ல நேரம் பார்க்கப்படும். வரும் 29-ம் தேதி முதல் இந்த தேச துரோகிகள் கொல்லப்படுவார்கள். இதன்மூலம் உங்கள் கடைசி பயணத்திற்கு தயாராகுங்கள். அதுவும் நீங்கள் தனியாக இல்லை. இந்த பட்டியலில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து பயணியுங்கள். நீங்கள் நிச்சயம் அகற்றப்படுவீர்கள் " என முகவரி அடையாளம் தெரியாதவர் இந்த மிரட்டல் கடித்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதம் கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ளது.

”29-ம் தேதி கொலை படலம் தொடங்கும்” - பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு இந்துத்வா கும்பல் மிரட்டல்!

அந்த கடிதத்தில், முன்னாள் பஜ்ரங் தளம் தலைவர் மகேந்திர குமார், நிஜகுணநந்த சுவாமி, நிதுமாமிடி வீரபத்ரா சென்னாமலா சுவாமி, பிராகாஷ் ராஜ், ஞானபிரகாஷ் அசுரி சுவாமி, சேட்டன் குமார், பி.டி.லலித் நாயக், பேராசிரியர் மகேஷ் சந்திர, பேராசிரியர் பகவான்,தினேஷ் அமின், சந்திரசேகர் பாட்டீல், தண்டி கணேஷ், ரவுடிஅக்னி ஸ்ரீதர், பிரிந்தா காரத் (கம்யூனிஸ்ட்), ஹெச்.டி குமாரசாமி ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்த கடிதம் சமூகவலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல மிரட்டல் கடிதம் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories