இந்தியா

குடியரசு தின விழாவுக்காக பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்ட போலிஸ் : உச்சகட்ட பாதுகாப்பு ஏன்?

குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லியில் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குடியரசு தின விழாவுக்காக பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்ட போலிஸ் : உச்சகட்ட பாதுகாப்பு ஏன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டின் 71வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பும், மாநிலங்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் அணிவகுப்பும் நடைபெறும்.

ராஜவீதி முதல் செங்கோட்டை வரையில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட முகங்கள் தெரியும் அளவுக்கு சிசிடிவி கேமிராக்கள், ட்ரோன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், அந்த பகுதியில் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவுக்காக பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்ட போலிஸ் : உச்சகட்ட பாதுகாப்பு ஏன்?

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு, 15 ஆயிரத்துக்கும் மேலான காவல்துறையினர், இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளதால் தலைநகர் டெல்லி முழுவதும் 22 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் 48 மத்திய படைக்குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு மாநில தலைநகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு பல்லாயிரக் கணக்கானோரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது மக்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories