இந்தியா

“ATM கார்டே தேவையில்லை” : SBI வங்கியை தொடர்ந்து பணம் எடுப்பதில் புதிய உத்தியை அறிமுகம் செய்த ICICI வங்கி!

ஏ.டி.எம். மோசடியை தடுப்பதற்காக எஸ்.பி.ஐ, கனரா வங்கியை போல புதிய உத்தியை கையாண்டுள்ளது ஐசிஐசிஐ வங்கி.

“ATM கார்டே தேவையில்லை” : SBI வங்கியை தொடர்ந்து பணம் எடுப்பதில் புதிய உத்தியை அறிமுகம் செய்த ICICI வங்கி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏ.டி.எம். கொள்ளைச் சம்பவங்களை தடுப்பதற்காக வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பணப் பரிவர்த்தனைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றன.

போலி ஏ.டி.எம் மோசடிகளை தடுக்க கனரா, எஸ்.பி.ஐ போன்ற வங்கிகள் OTP முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஏ.டி.எம்மில் இருந்து பணத்தை எடுப்பதற்கு புது உத்தியை கையாண்டுள்ளது.

“ATM கார்டே தேவையில்லை” : SBI வங்கியை தொடர்ந்து பணம் எடுப்பதில் புதிய உத்தியை அறிமுகம் செய்த ICICI வங்கி!

அதன்படி, ஏடிஎம் கார்டை மறந்துவிட்டாலோ அல்லது ஏடிஎம் கார்டை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்று வாடிக்கையாளர்கள் ஆபத்தாக உணர்ந்தாலோ ஐசிஐசிஐ செயலி மூலம் பணத்தை ஏ.டி.எம்மில் இருந்து எடுத்துக்கொள்ளும் வகையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் பணத்தை எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம். கார்டு இல்லாமல் ஐசிஐசிஐ வங்கி ஏ.டி.எம்மில் இருந்து பணத்தை எடுக்கும் வழிமுறை:

1. iMobile செயலில் இருந்து Service > Cardless cash withdrawal ஐ தேர்வு செய்யவேண்டும்.

2. அதில், தேவையான பண மதிப்பை குறிப்பிட்டு, 4 இலக்க தற்காலிக எண்ணைப் பதிவு செய்து Submit கொடுக்க வேண்டும். பின்னர், OTP எண் வரும்.

3. ஏ.டி.எம் இயந்திரத்தில் Cardless cash withdrawal என்பதை தேர்வு செய்து வங்கி கணக்குக்கு கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவிட்டதும் OTP எண் வரும்.

4. ஏற்கெனவே பதிவிட்ட 4 இலக்க தற்காலிக எண்ணையும், OTP எண்ணையும் ஏ.டி.எம்மில் பதிவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணத்தை எடுக்க முடியும். இந்த சேவை நாடு முழுவதும் உள்ள 15 ஆயிரம் ஏ.டி.எம்.களில் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories