இந்தியா

ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பு குறைப்பு - இனி OTP அவசியம்!

ஏடிஎம் மோசடிகளை தடுப்பதற்காக பாரத ஸ்டேட் வங்கி புதிய நடைமுறைகளை கொண்டுவந்துள்ளது.

ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பு குறைப்பு - இனி OTP அவசியம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போலி ஏ.டி.எம் கார்டுகள் மூலம் ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த மோசடி வேலைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இது போன்ற மோசடிகள் தொடர்பாக வங்கிகளுக்கும் ஏராளமான புகார்கள் வந்துக் கொண்டிருப்பதால் புதிய நடைமுறை ஒன்றை செயல்படுத்தவுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.

அதன்படி, நாள் ஒன்றுக்கு பணம் எடுக்கும் அதிகபட்ச வரம்பை 40 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக குறைத்ததோடு மட்டுமல்லாமல், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏ.டி.எமில் இருந்து பணம் எடுத்தால் ரகசிய எண்ணை (OTP) பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பு குறைப்பு - இனி OTP அவசியம்!

இந்த முறையை இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், ரூ.10,000க்கு மேல் பணம் எடுக்கும் போது வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு வரும் ரகசிய எண்ணை ஏ.டி.எம் இயந்திரத்தில் பதிவிட்ட பிறகே பணம் எடுக்க முடியும் என்றும் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

மேலும், இந்த முறை எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்-ஐ பயன்படுத்தும் அதன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும், மற்ற வங்கி வாடிக்கையாளர்கள் பழைய முறையிலேயே பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியதோடு, இந்த புதிய நடைமுறை வருகிற ஜனவரி 1ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories