இந்தியா

வேலையின்மையால் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் 2ம் இடம் - தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல்!

2018ம் ஆண்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்ததற்கு வேலையில்லாத் திண்டாட்டமே காரணம் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

வேலையின்மையால் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் 2ம் இடம் - தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018ம் ஆண்டில் நாள்தோறும் சராசரியாக 35 பேரும், சுயதொழில் செய்வோர் 36 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவில் 17 ஆயிரத்து 972 பேரும், தமிழகத்தில் 13 ஆயிரத்து 896 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேற்குவங்கம், மத்திய பிரதேசம், கர்நாடக மாநிலங்கள் முறையே 3,4 மற்றும் 5ஆம் இடத்தில் உள்ளன.

2018ம் ஆண்டு தற்கொலை செய்தவர்களில் விவசாயத் துறையை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 349 ஆக உள்ளது. உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

வேலையின்மையால் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் 2ம் இடம் - தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல்!

இதேபோன்று, வேலை கிடைக்காமல் 12 ஆயிரத்து 936 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களால் 2018ம் ஆண்டு தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதும் இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories