இந்தியா

“மோடி ஆட்சியில் அதிகரித்த விவசாயிகள் தற்கொலை” : ஒருவருடத்தில் மட்டும் 10,349 பேர் தற்கொலை! - #NCRBReport

கடந்த 2018-ம் ஆண்டில் நாடு முழுவதும் 10,349 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“மோடி ஆட்சியில் அதிகரித்த விவசாயிகள் தற்கொலை” : ஒருவருடத்தில் மட்டும் 10,349 பேர் தற்கொலை! - #NCRBReport
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய குற்றவியல் ஆவண காப்பகம், நாட்டில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரித்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி கடந்த 2018-ம் ஆண்டில் நாடு முழுவதும் 10,349 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில், 2018-ம் ஆண்டில் நாடு முழுவதும் 1,34,516 நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 17,972 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடமான தமிழநாட்டில் 13,896 பேரும், மேற்கு வங்கம் 13,255 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளன. மத்தியப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

இந்த 5 மாநிலங்களில் மட்டும் 50.9 சதவிகிதம் தற்கொலைகள் நடந்துள்ளன. 49.1 சதவிகித தற்கொலைகள் மீதமுள்ள 24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.

“மோடி ஆட்சியில் அதிகரித்த விவசாயிகள் தற்கொலை” : ஒருவருடத்தில் மட்டும் 10,349 பேர் தற்கொலை! - #NCRBReport

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட 1,34,516 பேர்களில், விவசாயிகள் மட்டும் 10,349 பேர் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களில், 5,763 பேர் விவசாயிகள். 4,586 பேர் விவசாயத் தொழிலாளர்கள்.

மேலும், 306 பெண் விவசாயிகள், 515 பெண் விவசாயத் தொழிலாளர்களும் இந்த தற்கொலை எண்ணிக்கைக்குள் அடங்குவர். நாட்டின் ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கையில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை மட்டும் 7.7 சதவிகிதமாக உள்ளது.

ஒட்டுமொத்த தற்கொலைகளைக் கணக்கில் கொண்டால், 2017-ம் ஆண்டைவிட 2018-இல் 3.6 சதவிகிதம் பேர் கூடுதலாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேநேரம் 2017-ல் 11,319 விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகி இருந்தன.

கடந்த 2018-இல் மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, உத்தர்கண்ட், மேகாலயா, கோவா, சண்டிகர், டாமன் டையு, தில்லி, லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் என்.சி.ஆர்.பி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது

banner

Related Stories

Related Stories