இந்தியா

பிரச்னையை திசை திருப்புவதே மோடியின் நோக்கம் - வறுத்தெடுத்த இந்திய மருத்துவர்கள் சங்கம்!

மருத்துவர்கள் தொடர்பாக பிரதமர் மோடி பேசியிருப்பது நிரூபிக்க வேண்டும் அல்லது மறுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

பிரச்னையை திசை திருப்புவதே மோடியின் நோக்கம் - வறுத்தெடுத்த இந்திய மருத்துவர்கள் சங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவர்களுக்கு லஞ்சமாக மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பெண்களை அனுப்புவதாக பிரதமர் மோடி கூறியதாக செய்தி வெளியானது. கடந்த 2ம் தேதி டெல்லியில் டொரண்ட் ஃபார்மாஸிட்டிகல்ஸ், வாக்ஹார்ட், ஸைடஸ் போன்ற பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

அந்தக் கூட்டத்தின் போது, மருந்துகளை சந்தையில் விற்பதற்காக மருத்துவர்களுக்கு லஞ்சமாக மருந்து நிறுவனங்கள் பெண்களை அனுப்பி வைப்பதும், வெளிநாட்டு பயணத்துக்கு ஏற்பாடு செய்வது, தங்கம் வெள்ளி போன்ற பரிசுப்பொருட்களை கொடுக்கிறது என எச்சரிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக தகவல்கள் வெளியாகின.

பிரச்னையை திசை திருப்புவதே மோடியின் நோக்கம் - வறுத்தெடுத்த இந்திய மருத்துவர்கள் சங்கம்!

இதனையறிந்த இந்திய மருத்துவ சங்கம் மோடிக்கு எதிரான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மருத்துவர்களுக்கு பெண்களை அனுப்புவது தொடர்பாக மருந்து தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி ஏன் பேச வேண்டும் என்றும், அந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பின் அதில் தொடர்புடைய மருத்துவர்களின் பெயர்களை மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு தெரிவிக்காமல் மருந்து தயாரிக்கும் நிறுவன பிரதிநிதிகளை அழைத்து எச்சரிப்பது எந்த வகையில் முறையானது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் மீதான குற்றச்சாட்டை உண்மை என பிரதமர் அலுவலகம் நிரூபிக்கவேண்டும்.

பிரச்னையை திசை திருப்புவதே மோடியின் நோக்கம் - வறுத்தெடுத்த இந்திய மருத்துவர்கள் சங்கம்!

இல்லையெனில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது. இதற்கிடையில், மருத்துவர்கள் மீது குற்றமிருப்பின் அதனை மருத்துவ சங்கத்துக்கு தெரிவித்தால்தான் மாநில மருத்துவ கவுன்சிலுக்கு தகவல் அனுப்பப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுமட்டுமல்லாமல், சுகாதாரத்துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீடுகள் நிலுவையில் உள்ளது. மனிதவளத்துக்கான முதலீடுகள் ஏதும் உருவாக்காமல் உள்ளது. இவற்றையெல்லாமல் கண்டுகொள்ளாமல், அதனை திசைத்திருப்பும் வகையில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடனான பிரதமர் மோடியின் பேச்சு இருந்துள்ளதா என்றும் இந்திய மருத்துவர் சங்கம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories