இந்தியா

“வன்முறையை நிறுத்துங்கள்” : ஜே.என்.யூ தாக்குதல் குறித்து பா.ஜ.க அரசுக்கு சன்னி லியோன் அட்வைஸ்!

எனக்கு வன்முறையில் துளியும் நம்பிக்கையில்லை. வன்முறை இல்லாமல் தீர்வை நோக்கி நகரவேண்டும் என நடிகை சன்னி லியோன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“வன்முறையை நிறுத்துங்கள்” : ஜே.என்.யூ தாக்குதல் குறித்து பா.ஜ.க அரசுக்கு சன்னி லியோன் அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர், மாணவர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் மட்டுமின்றி, திரைப் பிரபலங்களும் ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து வருகின்றனர்.

முன்னதாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பாலிவுட் நட்சத்திரங்கள் அனுராக் காஷ்யப், டாப்ஸி, ஜோயா அக்தர், தியா மிர்சா உள்ளிட்ட பலர் பங்கேற்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

அதேபோல் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்ததார். இந்நிலையில் தற்போது, ஜே.என்.யூ தாக்குதல் சம்பவம் குறித்து நடிகை சன்னி லியோன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“வன்முறையை நிறுத்துங்கள்” : ஜே.என்.யூ தாக்குதல் குறித்து பா.ஜ.க அரசுக்கு சன்னி லியோன் அட்வைஸ்!

அதில், “எனக்கு வன்முறையில் துளியும் நம்பிக்கையில்லை. வன்முறை இல்லாமல் தீர்வை நோக்கி நகரவேண்டும் என நான் விம்புகிறேன்.

இப்போது நடைபெற்ற தாக்குதல் மாணவர்களை மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்திலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது அவர்கள் அச்சமடைந்துள்ளனர். பாதுகாப்பு குறித்து மிகுந்த அச்சம் உருவாகியுள்ளது.

வன்முறையை நிறுத்துமாறு ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி. இப்பிரச்னையில், யாரையும் பாதிக்காத வகையில் ஒரு நல்ல தீர்வினைக் காணவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories