இந்தியா

அமெரிக்கா - ஈரான் மோதல் எதிரொலி : இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

இந்திய விமானங்கள் ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளின் பகுதியில் பறப்பதை தவிர்க்குமாறு இந்திய விமானங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் மோதல் எதிரொலி : இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் இருநாட்டு மக்கள் மட்டுமல்லாது உலக மக்களிடையேயும் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்திய விமானங்கள் ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளின் பகுதியில் பறப்பதை தவிர்க்குமாறு இந்திய விமானங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் எந்தவித அத்தியாவசிய தேவையின்றி இந்தியர்கள் ஈராக் செல்லவேண்டாம் என்றும், ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் ஈராக்கினுள் பயணம் செய்வதை தவிருங்கள் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை பாக்தாத், எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்கள் தொடர்ந்து செய்யும் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories