இந்தியா

மோடி அரசுக்கு எதிராக பொது வேலைநிறுத்தம் : நாடு முழுவதும் 25 கோடி பேர் பங்கேற்பு!

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி அரசுக்கு எதிராக பொது வேலைநிறுத்தம் : நாடு முழுவதும் 25 கோடி பேர் பங்கேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி அரசுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டத்தால் இந்தியா ஸ்தம்பித்தது!

மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும் பொதுநிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன.

இந்நிலையில், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கேங்வாரை சந்தித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுத்தல், வங்கிகள் இணைப்பைக் கைவிடுதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த பேச்சுவார்த்தைக்கு மத்திய பா.ஜ.க அரசு உடன்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக ஜனவரி 8ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதன்படி, இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

நாடு தழுவிய முழுகடை அடைப்பு போராட்டத்தால் பல மாநிலங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. மிகக்குறைந்த அளவு தமிழக அரசு பேருந்துகள் போலிஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. வணிக வளாகம், சிறு - குறு தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டது.

பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலிஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த போராட்டத்தால் மத்திய அரசு சந்தித்த இழப்பு குறித்து பின்னர் தெரியவரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், திருச்சி பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடக்கும் நிலையில் மத்திய அரசின் இந்த ஒப்புதல் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறியலில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் கைது!

சென்னை அண்ணா சாலை அருகே மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்ட மாணவ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

மோடி அரசுக்கு எதிராக பொது வேலைநிறுத்தம் : நாடு முழுவதும் 25 கோடி பேர் பங்கேற்பு!

பொது வேலைநிறுத்தம் : பல்லாயிரக் கணக்கானோர் கைது!

மோடி அரசை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் தமிழகத்தில் சென்னை, அரியலூர், கரூர், மதுராந்தகம், புதுச்சேரி என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர், மக்கள் பிரதிநிதிகள் என பல்லாயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன?

சென்னையில் தொழிற்சங்க தலைவர்கள் கைது!

சென்னையில் மோடி அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது; போலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்

மோடி அரசுக்கு எதிராக பொது வேலைநிறுத்தம் : நாடு முழுவதும் 25 கோடி பேர் பங்கேற்பு!

வேலைநிறுத்தம் எதிரொலி - வங்கிப் பணிகள் முடக்கம்

பொது வேலைநிறுத்தத்தால் சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் ரூ.21,500 கோடி மதிப்பிலான காசோலைகள் தேக்கம். சென்னையில் மட்டும் சுமார் 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் தேக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்!

மோடி அரசுக்கு எதிராக பொது வேலைநிறுத்தம் : நாடு முழுவதும் 25 கோடி பேர் பங்கேற்பு!

சென்னையில் தொ.மு.சவினர் கைது!

சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் அருகே 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சென்னையில் மறியல் போராட்டம்!

தொ.மு.ச பேரவை சார்பில் சென்னையில் மறியல் போராட்டம்!

அகில இந்திய வேலை நிறுத்தத்தையொட்டி சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தி.மு.க தொழிற்சங்கமான தொ.மு.ச சார்பில் அறிவிப்பு.

சென்னை அண்ணாசாலையில் தலைமை தபால் நிலையம் அருகே காலை 9 மணி அளவில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்.

போராட்டம் எதிரொலி : பேருந்துகள் நிறுத்தம்!

மோடி அரசுக்கு எதிராக பொது வேலைநிறுத்தம் : நாடு முழுவதும் 25 கோடி பேர் பங்கேற்பு!

இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறுவதால் கன்னியாகுமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் இருந்து கேரள செல்லும் அனைத்து பேருந்துகளும் தமிழ்நாடு - கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேற்குவங்கத்தில் போராட்டம் தொடங்கியது!

மோடி அரசுக்கு எதிராக பொது வேலைநிறுத்தம் : நாடு முழுவதும் 25 கோடி பேர் பங்கேற்பு!

மேற்குவங்கம் மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில் ரயில்களை மறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்.

பொது வேலைநிறுத்தம் தொடங்கியது!

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories