இந்தியா

ஈரான் - அமெரிக்கா இடையே என்ன பிரச்னை? காரணம் என்ன? எப்போது தொடங்கியது? - இதில் இந்தியா பாதிக்கப்படுமா?

அமெரிக்காவின் அதிகார மோதலால் உலக நாடுகளின் பங்குச் சந்தையிலும் எதிரொலித்து, பங்குகள் விலை குறைந்துள்ளது. அதனால் இந்தியப் பொருளாதாரம் மேலும் மோசமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே என்ன பிரச்னை? காரணம் என்ன? எப்போது தொடங்கியது? - இதில் இந்தியா பாதிக்கப்படுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஈரான் நாட்டின் சிறப்பு ராணுவத் தளபதி காசிம் சுலைமானி, அமெரிக்க படைகளால் குண்டு வீசி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு பழி தீர்க்க ஈரான் தீவிர முயற்சி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் எப்படி தொடங்கியது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் என்ன பிரச்னை? இரு நாடுகளுக்கிடையிலான இந்த பிரச்னையில் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? போன்றவற்றை பார்ப்போம்.

தொடக்கப் புள்ளி:

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்தார். அணு ஆயுத தயாரிப்பை கைவிடக் கோரியும், சிரிய போரில் இருந்து பின்வாங்குமாறும் அமெரிக்கா நிபந்தனை விதத்தது. உடன் படவில்லை எனில், பொருளாதாரத் தடை விதிப்போம் என எச்சரித்தார் டிரம்ப்.

அமெரிக்காவின் 12 அம்ச நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்துவிட்டது. அதுதான் இப்போதிருக்கும் பதட்ட நிலையின் தொடக்கப் புள்ளி.

பின்னர் ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியது.

இதனையடுத்து ஈரான் தனது சிறிய ரக போர் விமானம், போர்க்கப்பல்களை அமெரிக்காவை நோக்கி திருப்பியது. மேலும், ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பகுதிக்குள் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் பறந்ததை அடுத்து அந்த விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. ஆனால் தாங்கள் சர்வதேச எல்லையில் தான் விமானத்தை இயக்கியது அமெரிக்கா கூறியது.

இதனால் இருநாடுகளும் பகைமையை மேலும் அதிகரித்துக் கொண்டன. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்ததாகவும் தகவல் வெளிவந்தது.

ஈரான் - அமெரிக்கா இடையே என்ன பிரச்னை? காரணம் என்ன? எப்போது தொடங்கியது? - இதில் இந்தியா பாதிக்கப்படுமா?

அதனையடுத்து, ஈரானின் ஏவுகணைகள், கண்காணிப்பு ரேடார்கள் ஆகியவற்றை குறிவைத்து ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், இந்த தாக்குதலுக்கு டொனால்டு ட்ரம்ப்பும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பின்னர் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தாக்குதலுக்கு தயாரான நிலையில், ட்ரம்ப் திடீரென தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பின்வாங்கியதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான சிறப்பாணையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

அமெரிக்கா ஒருபுறம் வரிசையாக தடைகளை விதிக்கிறது. இதற்கு இடையிலேயே மோதல் அதிகமானதால், அமெரிக்கா-ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றம் எங்களை கவலை அடைய செய்கிறது, இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலிடம் வலிறுத்தினர்.

ஆனால் சமாதான முயற்சிக்கு இரண்டு நாடுகளுமே முன்வரவில்லை. இந்த சூழலில் சமாதானம் பேசுவதற்கு கதவுகளை திறந்து வைப்பதாக அமெரிக்கா பொய் பேசுகிறது என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி குற்றச் சாட்டினார்.

ஹசன் ரவுகானி
ஹசன் ரவுகானி

இப்படியாக 6 மாதங்களாக நீடித்து வந்த போராட்டம் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் பெரும் பதற்றமான சூழலை இருநாடுகள் மத்தியில் உருவாகியது.

எண்ணெய் இறக்குமதிக்கு தடை:

வல்லரசு நாடான அமெரிக்கா, எண்ணெய் வளம் மிக்க நாடுகளுடன் சண்டையிடவில்லை என்றால்தான் ஆச்சரியம். பெட்ரொலிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் முக்கிய நாடுகள் பட்டியலில் ஈரானும் ஒன்றாகும்.

அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் ஈரான் எண்ணெய் ஏற்றுமதி செய்வதை அமெரிக்காவினால் பொருத்துக்கொள்ள முடியவில்லை.

அதன்வெளிபாடே உள்நாட்டிற்குள் தீவிரவாத குழுக்களை ஏவி விடுதல், ஈரானின் அருகில் உள்ள நாடுகளுடனான எல்லை பிரச்சனையை தூண்டி விடுவது போன்ற பல வேலைகளை அமெரிக்கா செய்து வந்தது.

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதித்தது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்தது அமெரிக்கா.

ஈரானின் மிக முக்கிய ஆதாரமான எண்ணெய் ஏற்றுமதியில் அமெரிக்கா கை வைத்ததால், ஈரான் அணு ஆயுத ஊற்பத்தியை அதிகரித்தது. யுரேனியம் பயன்பாட்டை அதிகரித்தது. இதன் மூலம், மேற்கத்திய நாடுகள் தங்கள் மீதான பொருளாதாரத் தடையை நீக்க குரல் கொடுக்க வேண்டும் என்பது ஈரானின் திட்டம்.

இந்நிலையில் கடந்த வாரம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஈரான் - அமெரிக்கா இடையே என்ன பிரச்னை? காரணம் என்ன? எப்போது தொடங்கியது? - இதில் இந்தியா பாதிக்கப்படுமா?

இந்த தாக்குதலைத் தொடங்கி வைத்ததே அமெரிக்கா தான் என கடாயெப் ஹிஸ்புல்லா படை தெரிவித்தது. இந்த தாக்குதலால் கொதித்துத் போன அமெரிக்கா, ஈராக்கில் இருந்த ஹிஸ்புல் அமைப்பின் தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல் அமைப்பைச் சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாகவே ஈரானின் சிறப்பு ராணுவத் தளபதி காசிம் சுலைமானி, ஈராக்கில் வைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொல்லப்பட்டார்.

சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா சொன்ன காரணம், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைகள் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகளைக் கொல்ல சுலைமானி சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும், நேரடியாகவும் மறைமுகமாகவும் பல அமெரிக்கர்கள் உயிரிழக்க சுலைமானிதான் காரணம் என்றார் டிரம்ப். சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு தர, சுலைமானியின் மேற்பார்வையில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டது ஈரான். லெபனான் நாடு ஹிஸ்புல் படை நிறுவியது, ஈராக்கில் ஆதரவு படைகள் மூலம் அமெரிக்காவை எதிர்த்தது என சுலைமானியின் மத்திய கிழக்கின் மாஸ்டர் மைண்டாகவே இருந்தார்.

ஈரானின் இரண்டாம் சக்தி வாய்ந்த ஆளுமையாக அறியப்பட்ட சுலைமானி கொல்லப்பட்டதால், சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈராக்கின் வடக்கு பாக்தாத் பகுதியில் அமெரிக்க படைகள் வான் வழித் தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் இந்த அதிகார மோதலால் உலக நாடுகள் பெரும் கவலைக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக, இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் ஹாங்காங், ஜப்பான், சீனா மற்றும் இந்திய ஆகிய நாடுகளின் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. பங்குகள் விலை சரிந்தன.

இந்திய பங்குகளின் அதன் தாக்கம் மிகவும் அதிகாமகியுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் எண்ணெய் நிறுவனப் பங்குகள் அனைத்தும் திடீரென விலை குறையத் தொடங்கின. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும், வர்த்தகத் தொடக்கத்தில் ரூ71.16 ஆக வீழ்ச்சி அடைந்தது.

இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பதற்றம் காரணமாக, அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் பெட்ரோலியக் கச்சா விலையில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்படும். இது இந்தியப் பொருளாதாரத்தை இன்னும் பாதிக்கும். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும்.

தற்போது இந்தியப் பொருளாதாரம் சரிவில் இருந்து மீண்டு வரவே தவித்து வரும் வேலையில் இதுபோன்ற பதற்றமான சூழல் வளர்ச்சிக்கு கடும் சவாலாக இருக்கும். ஈரான் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறது என்பதை வைத்து சந்தை முடிவுகள், கச்சா எண்ணெய் விலை முடிவாகும்.

banner

Related Stories

Related Stories