இந்தியா

“இவர் இந்திய பிரதமரா? பாகிஸ்தான் தூதுவரா?”: மோடியின் செயலுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்!

நீங்கள் இந்திய நாட்டுக்கு பிரதமரா? அல்லது பாகிஸ்தானுக்கு தூதரா? ஏன் அனைத்து விவகாரத்திலும் பாகிஸ்தானை குறிப்பிடுகிறீர்கள் என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இவர் இந்திய பிரதமரா? பாகிஸ்தான் தூதுவரா?”: மோடியின் செயலுக்கு  மம்தா பானர்ஜி கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் பா.ஜ.க அரசு இந்த சட்டம் மூலம் ‘இந்து ராஷ்ட்டிரம்’ என்ற தனது ஆர்.எஸ்.எஸ் கனவை இந்தியாவில் நிறுவ முயற்சிக்கிறது என காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், தொடர் போராட்டங்களை முன்னொடுக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றைய தினம் சிலிகுரியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “சுதந்திரம் பெற்ற 70 வருடம் ஆன பிறகு கூட நாட்டு மக்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்பது அவமானமானது. இந்தியா மிகப் பெரிய கலாச்சாரம், பாரம்பரியத்தைக் கொண்ட நாடு. ஆனால் அதன் தன்மைகளை பேசாமல் பிரதமர் மோடி, இந்தியாவை ஏன் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பேசுகிறார்?.

“இவர் இந்திய பிரதமரா? பாகிஸ்தான் தூதுவரா?”: மோடியின் செயலுக்கு  மம்தா பானர்ஜி கடும் கண்டனம்!

இதுபோல கருத்துக்களை அவர் தொடர்ந்து பேசிவருகிறார். இதன் மூலம் கேள்வி என்னவென்றால், நீங்கள் இந்திய நாட்டுக்கு பிரதமரா? அல்லது பாகிஸ்தானுக்கு தூதரா? ஏன் அனைத்து விவகாரத்திலும் பாகிஸ்தானை குறிப்பிடுகிறீர்கள்?

தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டுவருவது தொடர்பாக மக்கள் மத்தியில் பா.ஜ.க அரசு குழப்பத்தை ஏற்படுத்திகிறது. ஒருபுறம் பிரதமர் தேசிய குடிமக்கள் பதிவேடு இல்லை என்கிறார். ஆனால் மற்றொரு புறம் மத்திய உள்துறை அமைச்சர், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்கிறார். மக்கள் இதில் எதை ஏற்பது?”

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

banner

Related Stories

Related Stories