இந்தியா

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகள் திடீர் கைது - வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டதால் பரபரப்பு!

ஸ்ரீநகரில் செய்தியாளர் சந்திப்புக்கு திட்டமிட்டிருந்த மெகபூபாவின் மகள் இல்திஜா முஃப்தி குப்கார் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகள் திடீர் கைது - வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டதால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றி அமைத்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட காஷ்மீர் அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலிலும், விருந்தினர் மாளிகை காவலிலும் வைத்தது.

இந்த நிலையில் மெகபூபாவின் மகள் இல்திஜா முஃப்தி, நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுடன் கலந்துரையாடவும், அனந்தநாக்கில் உள்ள தனது தாத்தாவும் மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனருமான முஃப்தி முகமது சயீத்தின் நினைவிடத்துக்கும் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர் ஸ்ரீநகரில் உள்ள குப்கார் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories