இந்தியா

’இந்தியாவுக்கு சுற்றுலா வேண்டாம்’ : எச்சரிக்கும் உலக நாடுகள்.. மோடி ஆட்சியில் வீழ்ந்த சுற்றுலாத்துறை !

குடியுரிமை சட்ட திருத்துத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவதால் இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சுமார் 60% குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

’இந்தியாவுக்கு சுற்றுலா வேண்டாம்’ : எச்சரிக்கும் உலக நாடுகள்.. மோடி ஆட்சியில் வீழ்ந்த சுற்றுலாத்துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், மோடி அரசு கொண்டுவ ந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும், குறிப்பாக வட இந்தியாவில் இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும், இந்தப் போராட்டங்கள் காரணமாக, இந்தியாவுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு 7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை 60 சதவீதம் சரிந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வட மாநிலங்களிலான அசாம், டெல்லி, கோவா போன்ற பகுதிகளுக்கு லட்சக்கணக்கான வெளிநாட்டு பயனிகள் வருகை தருவார்கள். குறிப்பாக, அசாம் மாநிலத்திற்கு மட்டும் டிசம்பர் மாதத்தில் சுமார் 5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் வருகை தருவர். ஆனால், இந்தமுறை வெளிநாட்டு பயணிகளின் வருகை 90% அளவிற்குச் சரிவைச் சந்தித்துள்ளது.

அதேபோல கோவாவில், சுற்றுலா பயணிகளின் வருகை 50 சதவிகிதம் சரிந்துள்ளது. கடந்த 2018 டிசம்பரில் ஏறத்தாழ 42 ஆயிரம் பயணிகள் கோவா சுற்றுலாவுக்கு வந்த நிலையில், இந்த ஆண்டில் 19 ஆயிரம் பேர்கூட வரவில்லை என கூறப்படுகிறது.

’இந்தியாவுக்கு சுற்றுலா வேண்டாம்’ : எச்சரிக்கும் உலக நாடுகள்.. மோடி ஆட்சியில் வீழ்ந்த சுற்றுலாத்துறை !

அதுமட்டுமின்றி, இந்தியாவில் சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்க்கும் இடங்களில் ஒன்றாக தாஜ்மகால் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 65 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தால் கடந்த 2 வாரங்களில் மட்டும் தாஜ்மகால் வர இருந்த சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் பயணத்தை ரத்து செய்துள்ளனர் என சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுதொடர்பாக பேசிய அதிகாரி, “இந்தியாவில் நடைபெறும் போராட்டத்தை அடுத்து சில வெளிநாட்டு பயணிகள், எங்களைத் தொடர்பு கொண்டு, போராட்ட நிலவரம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கேட்கின்றனர்.

பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி கூறினாலும், தயக்கத்தால் தங்களின் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்தியாவுக்கு சுற்றுலா வர திட்டமிட்டிருந்த ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் குழுவினர் மொத்தமாக பயணத்தை ரத்து செய்து விட்டனர்” எனத் தெரிவித்தார்.

’இந்தியாவுக்கு சுற்றுலா வேண்டாம்’ : எச்சரிக்கும் உலக நாடுகள்.. மோடி ஆட்சியில் வீழ்ந்த சுற்றுலாத்துறை !

இந்த பிரச்சனைகளால் தங்கும் விடுதிகள் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் அறை முன்பதிவு செய்தவர்கள் தங்களின் முன்பதிவுகளை ரத்து செய்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்த ஓட்டல் துறையினர் இதனால் கவலையும் அடைந்துள்ளனர்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையான நான்கு மாதங்களில் காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வருகை 80 சதவீதத்துக்கு அதிகமாகக் குறைந்துவிட்டதாக ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories