இந்தியா

CAA போராட்டத்தின் போது தாய், தந்தை சிறை - 9 நாட்களாக தவிக்கும் பிஞ்சுக் குழந்தை: பாஜக அரசு அராஜகம்!

போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களை சிறையில் அடைத்து 14 வயது குழந்தையை 9 நாட்களாக தவிக்க வைத்துள்ளது உத்திர பிரதேச பா.ஜ.க அரசு

CAA போராட்டத்தின் போது தாய், தந்தை சிறை - 9 நாட்களாக தவிக்கும்  பிஞ்சுக் குழந்தை: பாஜக அரசு அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசு தனது இந்துத்வா கொள்கையை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்களைவிட தற்போது நாடுமுழுவதும் நடைபெறும் போராட்டம் பெரும் விஷ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த போராட்டத்தை ஒடுக்க பா.ஜ.க அரசு போலிஸாரையும், துணை ராணுவப்படையினரயும் இறக்கி பெரும் கலவரப்போக்கை கையாண்டுள்ளது. இந்த கலவரத்தில் நாடுமுழுவதும் இதுவரை 21 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். மேலும், 2,000-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் உள்ளனர்.

குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அந்தவகையில், போராட்டத்தில் கலந்துகொண்ட தம்பதியரை கைது செய்து, அவர்களின் 14 மாதமான குழந்தை பெற்றோரைப் பார்க்காமல் தவிக்கவிட்டுள்ளனர்.

 ரவி சேகர், ஏக்தா மற்றும்  14 மாதக் குழந்தை
ரவி சேகர், ஏக்தா மற்றும் 14 மாதக் குழந்தை

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 19-ம் தேதி அன்று, இடதுசாரிகள் நடத்திய நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் அமைதியாக நடந்தப் போராட்டம் கலவரமானது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 60 பேரை சிறையில் அடைத்து உள்ளது உத்திரபிரதேச அரசு.

அவர்களில் இளம் சமூக செயற்பாட்டாளர்களான ரவிசேகர் மற்றும் அவரது மனைவி ஏக்தா சிங் உள்ளனர். அவர்களுக்கு 14 மாதங்களே ஆன கை குழந்தை இருக்கிறது. வாரணாசியில் மஹ்முர்கஞ்சில் பகுதியில் வசிக்கும் ரவியும், ஏக்தாவும், தங்கள் பிஞ்சுக் குழந்தையை பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு பேரணியில் கலந்து கொள்ளச் சென்றதாக கூறப்படுகிறது.

CAA போராட்டத்தின் போது தாய், தந்தை சிறை - 9 நாட்களாக தவிக்கும்  பிஞ்சுக் குழந்தை: பாஜக அரசு அராஜகம்!

இதுதொடர்பாக ரவியின் உறவினர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இரண்டு நாட்களில் இருவரையும் விடுதலை செய்வதாக சொன்னார்கள். ஆனால், ஜாமீன் வழங்குவதற்குள் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

9 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார்கள். இங்கே அவர்களின் குழந்தை பெற்றவர்களை காணாமல் தவிக்கிறது. பெரிய அளவிலான குற்றங்களுக்கு ஜாமீன் கிடைக்கிறது. ஆனால் இந்த வழக்கில் ஜாமீன் பெற முடியவில்லை.

இது திட்டமிட்டு பா.ஜ.க அரசால் நடத்தபட்ட அராஜகம். பால்மணம் மாறாத குழந்தையை நினைத்துதான் நாங்கள் கவலைப் படுகிறோம்” என உருக்கமாகத் தெரிவித்தார். பா.ஜ.க அரசின் இத்தகைய நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories