இந்தியா

“CAA கொண்டு வந்த மோடி அரசுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டம் நிற்காது”: பிரியங்கா காந்தி உறுதி!

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் நடத்தும் போராட்டம் நிற்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

“CAA கொண்டு வந்த மோடி அரசுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டம் நிற்காது”: பிரியங்கா காந்தி உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.கவின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த போராட்டத்தை ஒடுக்க பா.ஜ.க அரசு பல்வேறு அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது.

மேலும் மாணவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அப்பாவி மக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து வருகின்றது. இந்த சூழலில் நாட்டின் பொருளாதாரம் மேலும் அதளபாதாளத்திற்கு செல்வதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பொருளாதார மந்தநிலைக் காரணமாக நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றியும், மக்கள் வாழ்வாதரமின்றியும் தவித்து வருகின்றனர். ஆனால் இதனைப் பற்றி கவலைப்படாத மோடி அரசாங்கம், இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பாஜக அரசின் காலவரிசைத் திட்டத்தை இளைஞர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். முதலில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்று உறுதி அளிக்கின்றனர்.

இதன் மூலம் ஆட்சியில் அமர்கின்றனர். அவர்கள் உங்கள் பல்கலைக்கழகங்களை அழிக்கின்றனர். நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் அழிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ”இதற்காக போராடும் உங்களை முட்டாள்கள் என்று அவர்கள் அழைக்கின்றனர். இதனால் இளைஞர்களின் போராட்டம் நிற்காது அடங்காது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories