இந்தியா

“உங்களால் ஆவணங்களை காட்ட முடியுமா?” : டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பிரியங்கா ஆவேசம்!

குடியுரிமை கேட்டு மக்கள் அனைவரையும் வரிசையில் நிற்கவைக்க வேண்டும் என இந்த அரசு விரும்புகிறது டெல்லி போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

“உங்களால் ஆவணங்களை காட்ட முடியுமா?” : டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பிரியங்கா ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, தற்போது பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மேலும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் 9-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாணவர் அமைப்பினர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று இரவு பங்கேற்றார். அங்கிருந்த மாணவர்களுடன் இணைந்து பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, “இந்த சட்டம் முழுக்கமுழுக்க ஏழை எளிய மக்களுக்கு எதிரானது.

ஏழை மக்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். தினக்கூலி தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்? இதனை கண்டித்து தான் அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுகிறது.

மேலும், இந்த சட்டத்தின் மூலம் மக்களை பிரிப்பதை ஏற்க முடியாது. குடியுரிமை கேட்டு மக்கள் அனைவரையும் வரிசையில் நிற்கவைக்க வேண்டும் என இந்த அரசு விரும்புகிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதுமட்டுமின்றி, தங்களது பூர்விக நிலம் தொடர்பான பழைய ஆவணங்களை எடுக்க வேண்டுமென்றால் எப்படி? உங்களால் காட்ட முடியுமா?.

நமது நாடு ஜனநாயக நாடு. அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை இருப்பதால் அமைதியான வழியில் போராட்டம் நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories