இந்தியா

’இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்த மோடி-ஷா கூட்டணி : அன்பு மட்டுமே நமது ஆயுதம்’ ! - ராகுல் காந்தி

இந்தியாவில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை மோடியும், அமித்ஷாவும் சிதைத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றான குடியுரிமை சட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க அரசு திருத்தத்தை கொண்டுவந்தது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. தொடர் போராட்டங்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில், கடந்த சில மாதங்களாக இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 4 மாதங்களாக நீடிக்கும் பொருளாதார மந்த நிலையை மறக்கடிவே மோடி அரசாங்கம் தற்போது குடியுரிமை சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை மோடியும் அமித்ஷாவும் சிதைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அன்பான இளைஞர்களே!, உங்களின் எதிர்காலத்தை மோடியும் அமிஷாவும் சிதைத்துவிட்டார்கள்.

வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் உங்களின் கோபத்திற்கு ஆளாகி அதை இருவர்களாலும் எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் தான், நாட்டை பிரித்து வெறுப்புணர்வுக்கு பின்னால் இருவரும் மறைந்துக் கொள்கிறார்கள்.

இந்நேரத்தில் இந்தியராக ஒவ்வொருவரிடம் அன்பு செலுத்தனால் மட்டுமே அவர்களை நாம்மால் வீழ்த்தமுடியும்” எனத் தெர்வித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories