இந்தியா

#CAA இந்தியாவை மத ரீதியாகப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது பா.ஜ.க : மம்தா பானர்ஜி

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பா.ஜ.க.,வுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார் மம்தா பானர்ஜி.

#CAA இந்தியாவை மத ரீதியாகப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது பா.ஜ.க : மம்தா பானர்ஜி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் 4வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் போராட்டத்தின் போது பேசிய மம்தா பானர்ஜி, “குடியுரிமை சட்டத் திருத்தம் தேவையா இல்லையா என ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கண்காணிப்பில் மக்களிடம் கருத்து கேட்பு நடத்த பா.ஜ.க.,வால் முடியுமா?

நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் குடிமக்கள் தான் என நிரூபிக்க வேண்டும் என கேட்கும் பா.ஜ.க 1980ம் ஆண்டுக்கு முன்னால் அதன் வாலும், தலையும் எங்கே இருந்தது என நிரூபிக்க முடியுமா?

இந்தியாவை மத ரீதியாக பிளவுபடுத்த பார்க்கிறது பா.ஜ.க. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெரும் வரை நாம் போராட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories