இந்தியா

ஜாமியா மாணவி ‘ஆயிஷா ரென்னா’ பெயரில் போலி செய்திகள் : ’போட்டோஷாப்’ செய்து அசிங்கப்பட்ட இந்துத்துவா கும்பல்

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவி ‘ஆயிஷா ரென்னா’ பெயரில் ஏராளமான போலி செய்திகளை சமூக ஊடகங்களில் இந்துத்வா கும்பல் பரவி வருகின்றன.

ஜாமியா மாணவி ‘ஆயிஷா ரென்னா’ பெயரில் போலி செய்திகள் : ’போட்டோஷாப்’ செய்து அசிங்கப்பட்ட இந்துத்துவா கும்பல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்து போராடி வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட, டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் முக்கியமானவர் ஆயிஷா ரென்னா.

ஜாமியா பல்கலைக்கழக மாணவி ஆயிஷா ரென்னா, கேரளாவைச் சேர்ந்தவர். இவரும் அவரது நண்பருமான லதீதா சகலூனும் நேற்று முன்தினம் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவரது நண்பர் லதீதா சகலூனை டெல்லி போலிஸார் தரதரவென இழுத்துச் சென்று, கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.

அந்த தாக்குதலில் இருந்து லதீதா சகலூனை பாதுகாக்க ஆயிஷா ரென்னா மற்றும் அவரது சக மாணவிகள் அந்த மாணவரை சூழ்ந்து நின்று பாதுகாத்தனர். அப்போது ஆயிஷா ரென்னா கைகளை நீட்டி போலிஸாரை மிரட்டியதும், போலிஸ் தாக்குதலை துணிச்சலுடன் எதிர்கொண்டதும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகின.

அய்ஷா ரென்னா
அய்ஷா ரென்னா

அந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆயிஷா ரென்னா மோடி அரசுக்கு எதிராக தீட்டமிட்டு வன்முறையை தூண்டி விடுவதாக இந்துத்வா கும்பல் தங்களது வழக்கமான பொய் பிரசாரத்தை பரப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.

குறிப்பாக, இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர் என்பதால் பா.ஜ.க அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்களை போராட்டத்தின் மூலம் தூண்டிவிட்டு வன்முறையை முயற்சிக்கிறார் என்று அந்த கும்பல் ’போட்டோஷாப்’ செய்யத் தொடங்கியது.

அந்த இந்துத்வா கும்பலின் வெளியிடும் செய்திகள் பொய் என ஆங்கில ஊடகம் ஒன்றில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பொய் பிரசாரம் செய்யும் கும்பல், ஆயிஷா ரென்னாவின் போராட்ட புகைப்படத்தை எடுத்து மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேசத்தில் அரசுக்கு எதிராகப் போராடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமியா மாணவி ‘ஆயிஷா ரென்னா’ பெயரில் போலி செய்திகள் : ’போட்டோஷாப்’ செய்து அசிங்கப்பட்ட இந்துத்துவா கும்பல்

மேலும், கடந்த மாதம் கேரளாவில் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஆயிஷா ரென்னா கலந்துக்கொண்டு ராகுல் காந்தியுடன் இருந்ததாக, பதிவிட்டுள்ளனர். ஆனால், அது தவறான தகவல். கேரள பள்ளி மாணவி சஃபா என்பவரை ஆயிஷாவாக சித்தரித்து புகைப்படத்தை இணைத்து வெளியிட்டுள்ளனர்.

அந்த கும்பல் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைத்தும் டெல்லிப் போராட்டத்தில் எடுக்கப்பட்டது என அந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த கும்பல் வெளியிட்ட தேதிகளிலும் வெவ்வொறு தேதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, முன்னதாக இந்த சட்டத்திற்கு இஸ்லாமியர்கள் ஆதரவு என்கிற வகையில் போலி செய்திகளை பரப்பி வந்தனர். இதற்காக ட்விட்டரில் ஒரே நாள் இரவில் இஸ்லாமியர்கள் பெயர்களில் ஃபேக் ஐடி உருவாக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories