இந்தியா

ஜாமியா & அலிகார் போராட்ட வன்முறை : “போராட்டத்தை நிறுத்தினால் விசாரிப்போம்” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான முறையீட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாமியா & அலிகார் போராட்ட வன்முறை :  “போராட்டத்தை நிறுத்தினால் விசாரிப்போம்” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று (டிச.,15) அமைதி வழியில் போராட்டத்தைத் தொடங்கினர்.

அதன் பின்னர் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக சென்ற ஜாமியா மாணவர்களை போலிஸார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். ஆனால், வேறு வழியாகச் சென்ற மாணவர்கள் மீது வன்முறையை ஏவி கண்மூடித்தனமாக தடியடியில் ஈடுபட்டுள்ளது டெல்லி போலிஸும், துணை ராணுவப்படையும்.

பெண்கள் ஆண்கள் எனப் பாராமல் ஈவு இரக்கமின்றி அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு காவல்துறையினர் நடத்திய தடியடியால் ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

ஜாமியா & அலிகார் போராட்ட வன்முறை :  “போராட்டத்தை நிறுத்தினால் விசாரிப்போம்” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

மேலும், பல்கலைக்கழகத்திற்குள் அனுமதியில்லாமல் நுழைந்த போலிஸார் அங்கிருந்த மாணவர்கள் மீதும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் மாணவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். வகுப்பறைகளை போலிஸார் சேதப்படுத்திய காட்சிகளும், மாணவர்களை தாக்கிய காட்சிகளும் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனையடுத்து, மாணவர்களின் போராட்டத்துக்கு பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்கள் மீது வன்முறையை ஏவிய போலிஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி ஜே.என்.யூ உள்ளிட்ட மாணவர்கள் டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு வலியுறுத்தினர்.

இதுமட்டுமல்லாமல், உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழக மாணவர்களும் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலிஸ் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறி மாணவர்கள் மீது போலிஸார் கண்ணீர் புகைக் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜாமியா & அலிகார் போராட்ட வன்முறை :  “போராட்டத்தை நிறுத்தினால் விசாரிப்போம்” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

இந்நிலையில், இந்திரா ஜெயசிங் என்ற மூத்த வழக்கறிஞர் ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

அதில், மனித உரிமைக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மீது வன்முறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அமைதியான முறையில் நடக்கும் போராட்டத்தின் போது, சில விஷமிகள் பேருந்துகளுக்கு தீவைத்து விட்டு மாணவர்களை பலிகடாவாக்குகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டது.

இந்த முறையீடு குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, “போராட்டத்தின் பெயரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் இந்த மனுவை விசாரிக்க முடியாது. போராட்டத்தை நிறுத்தி அமைதியாக இருந்தால் மட்டுமே விசாரிக்கப்படும்.

ஜாமியா & அலிகார் போராட்ட வன்முறை :  “போராட்டத்தை நிறுத்தினால் விசாரிப்போம்” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

போராட்டம் நடைபெற்ற இடம் அமைதியாக இருக்கவேண்டும். காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக மட்டுமே உள்ளனர். வன்முறைகள் நடைபெறும் போது அது தொடர்பாக முடிவெடுக்க முடியாது” எனக் கூறி நாளை விசாரிப்பதாக தெரிவித்தார்.

உண்மை எதுவென உணர்ந்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வாறு கூறியிருப்பது போராட்டக்காரர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories