இந்தியா

“இது பா.ஜ.க-வின் சாவர்க்கர் கொள்கை”: சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஒன்றிணைந்த கம்யூனிஸ்ட் - காங்கிரஸ்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் தலைமையில் திருவனந்தபுரத்தில் இன்று சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

“இது பா.ஜ.க-வின் சாவர்க்கர் கொள்கை”: சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஒன்றிணைந்த கம்யூனிஸ்ட் - காங்கிரஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களும் மாணவர்களும் நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் டெல்லியில் மாணவர்களை போலிஸ் தாக்கியதைக் கண்டித்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, மதுரை, புதுச்சேரி, பெங்களூரு, லக்னோ, ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் போலிசை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்டதிருத்தத்தை திரும்ப பெறவலியுறுத்தி கேரளாவிலும் போராட்டம் தொடங்கியுள்ளது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இதற்னான ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, கேரளாவில் இந்த சட்டதிருத்தத்தை அமல்படுத்த விடமாட்டோம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தற்போது, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் தலைமையில் திருவனந்தபுரத்தில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “நாட்டின் தற்போதைய இந்த சூழ்நிலையை பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது கொள்கைகளை செயல்படுத்த முயற்சிக்கின்றனர். நாட்டில் நிலையற்றத்தன்மை நிலவுகிறது.

ரமேஷ் சென்னிதாலா
ரமேஷ் சென்னிதாலா

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரளா ஒன்றாக நிற்கிறது. அதுமட்டுமின்றி, நமது உயர்ந்த பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நமது தேசத்தை பா.ஜ.க மதவாத நடாக மாற்ற முயற்சி செய்கிறது. இதற்கு எதிராக நாம் நடத்தும் இந்த போராட்டம் அனைவருக்குமான சத்தியாகிரகப் போராட்டம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, “நமது கோட்பாட்டை அழிக்கவே பா.ஜ.க இத்தகைய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்த கோட்பாட்டை தான் சாவர்க்கர் முன்வைத்தார். தேசத்தைப் பிளப்படுத்த சாவர்க்கரால் முன்வைத்தப்போராட்டத்தை மகாத்மா காந்தி கண்டித்தார். அதேவகையில் நாமும் பா.ஜ.க முன்வைக்கும் கோட்பாட்டை எதிர்கிறோம். கண்டிக்கிறோம்” என தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னனி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கட்சித் தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

banner

Related Stories

Related Stories