இந்தியா

உன்னாவ் பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க முன்னாள் MLA குல்தீப் சிங் குற்றவாளி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்!

உன்னாவ் பாலியல் வழக்கில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க முன்னாள் MLA குல்தீப் சிங் குற்றவாளி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. குல்தீப்புக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 19 அன்று வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 17வயது சிறுமியை கடந்த 2017ம் ஆண்டு பா.ஜ.க எம்.எல்.ஏவாக இருந்த குல்தீப் செங்கார் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியை லாரி ஏற்றிக் கொல்லவும் முயற்சி நடந்தது. இதில் அவரது உறவினர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க முன்னாள் MLA குல்தீப் சிங் குற்றவாளி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்!

இந்த சம்பவங்கள் தொடர்பாக குல்தீப் செங்கார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

உன்னாவ் பாலியல் வழக்கில் போக்சோ சட்டப்பிரிவின் படி, பா.ஜ.கவை சேர்ந்த குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று நீதிபதி தர்மேஷ் ஷர்மா தனது தீர்ப்பில் அறிவித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 19ம் தேதி அறிவிக்கப்படும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், உன்னாவ் வன்கொடுமை தொடர்பாக தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சி.பி.ஐக்கும் நீதிபதி தர்மேஷ் ஷர்மா கடும் கண்டனம் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories