இந்தியா

இதுவரை FASTAG அட்டை பெறாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!

ஃபாஸ்டேக் அட்டைக்கு விண்ணப்பிக்காத வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை FASTAG அட்டை பெறாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேசிய நெஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தானியங்கி முறையில் கட்டணம் செலுத்தும் விதமாக மத்திய அரசு ஃபாஸ்டேக் (FasTag) என்ற முறையை அறிமுகப்படுத்தியது.

அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் ஆதார், வாகன சான்றிதழ், ஃபோட்டோ ஆகியவற்றை ஆதாரங்களாக கொடுத்து ஃபாஸ்டேக் அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த ஃபாஸ்டேக் முறை டிசம்பர் 15ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும், அதற்குள் ஃபாஸ்டேக் அட்டையை வாகன ஓட்டிகள் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஃபாஸ்டேக்கை பெறுவதற்கு வங்கிகளில் போதிய அட்டைகள் இல்லாததாலும், பேடிஎம், அமேசான் போன்ற ஆன்லைன் சேவை நிறுவனங்கள் மூலம் விண்ணப்பித்தும் ஆர்டர் கேன்சல் ஆனதால் வாகன ஓட்டிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நாளை முதல் ஃபாஸ்டேக் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு விண்ணப்பிக்க மேலும் 1 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது மத்திய சாலை போக்குவரத்துத் துறை. மேலும் ஜனவரி 15ம் தேதி ஃபாஸ்டேக் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஃபாஸ்டேக் அட்டையை பெற்றவர்கள் அதன் மூலம் சுங்கக் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஃபாஸ்டேக்கை பெறாதவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories