இந்தியா

பப்ஜி விளையாடிக்கொண்டே தண்ணீருக்கு பதிலாக ரசாயனத்தை குடித்த இளைஞர் பரிதாப பலி : ‘கேம்’ மோகத்தால் சோகம்!

ஓடும் ரயிலில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பப்ஜி விளையாடிக்கொண்டே தண்ணீருக்கு பதிலாக ரசாயனத்தை குடித்த இளைஞர் பரிதாப பலி : ‘கேம்’ மோகத்தால் சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்கள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. முன்னதாக வந்த ப்ளூவேல் வீடியோ கேம் போன்று தற்போது இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது ‘பப்ஜி’ மோகம்.

இவை வெறும் விளையாட்டுகளாக மட்டும் இல்லாமல் பல்வேறு உடல் உபாதைகளையும் ஏற்படுத்திவிடுகின்றன. சில சமயங்களில் உயிரையும் காவு வாங்கும் அளவுக்கு அபாயகரமானதாக உள்ளன இது போன்ற விளையாட்டுகள்.

அவ்வகையில், மத்திய பிரதேச மாநிலத்தில் நகைத் தொழில் செய்துவரும் சந்தோஷ் சர்மா மற்றும் சவுரப் யாதவ் என்ற இரு இளைஞர்கள் குவாலியரில் இருந்து ஆக்ராவுக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தனர்.

பப்ஜி விளையாடிக்கொண்டே தண்ணீருக்கு பதிலாக ரசாயனத்தை குடித்த இளைஞர் பரிதாப பலி : ‘கேம்’ மோகத்தால் சோகம்!

அப்போது தீவிரமாக பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த சவுரப்புக்கு தாகம் ஏற்பட்டுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில் தண்ணீருக்கு பதிலாக நகைகளை பாலிஷ் செய்வதற்காக வைத்திருந்த ரசாயணத்தை எடுத்து குடித்துள்ளார்.

அதை உணர்வதற்குள் நொடியில் மயக்கமடைந்துள்ளார் சவுரப். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் சந்தோஷ் சர்மா. ஆக்ராவுக்கு முன்பு மொரெனா என்ற பகுதியை நெருங்கும்போது சவுரப் உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் ரயிலில் இருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக மும்பையைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் பப்ஜி விளையாட பெற்றோர் அனுமதிக்காததால் தற்கொலை செய்துகொண்டார். தற்போது பப்ஜி மோகத்தால் தண்ணீருக்கு பதில் வேதிப்பொருளை குடித்த இளைஞரும் உயிரிழந்தது பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த இளைஞர்களின் மரணம், மொபைல் கேம்களுக்கு அடிமையாகியிருக்கும் மற்ற அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும்.

banner

Related Stories

Related Stories