இந்தியா

குடியுரிமை மசோதா: அசாம் முதல்வர் வீடு மீது கல்வீச்சு - வடகிழக்கு மாநிலங்களில் வலுக்கும் போராட்டம்!

வட கிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வலுத்து வருவதால் 2வது நாளாக பதற்றம் நீடிக்கிறது. 

குடியுரிமை மசோதா: அசாம் முதல்வர் வீடு மீது கல்வீச்சு - வடகிழக்கு மாநிலங்களில்  வலுக்கும் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி குடியுரிமை சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது பா.ஜ.க அரசு. இது முழுக்க முழுக்க சிறுபான்மையினர்களுக்கு எதிரான மசோதா என நாடாளுமன்றத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.

இதற்கிடையில், குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகாலாந்து, அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

குடியுரிமை மசோதா: அசாம் முதல்வர் வீடு மீது கல்வீச்சு - வடகிழக்கு மாநிலங்களில்  வலுக்கும் போராட்டம்!

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையை ஏற்படுத்தும் வகையில் கவுஹாத்தி, திஸ்பூர் உள்ளிட்ட பல பகுதிகளின் சாலைகளில் டயர்களை தீயிட்டு எரித்தும், வாகனங்களை அடித்து நொறுக்கியும், சாலை மறியலிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்

மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அசாம் மாநிலமே போர்க்களம் போல காட்சியளித்தது. அசாம் மாநில முதலமைச்சர் வீட்டில் நேற்றிரவு போராட்டக்காரர்கள் கல் வீச்சில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

அதனையடுத்து, அம்மாநில பாஜக தலைவர் சுபாஷ் தத்தா மற்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏ பிரசந்தா புகான் ஆகியோரது வீட்டையும் சேதப்படுத்தியதால் மாநில அரசு ராணுவ உதவியை நாடியுள்ளது.

குடியுரிமை மசோதா: அசாம் முதல்வர் வீடு மீது கல்வீச்சு - வடகிழக்கு மாநிலங்களில்  வலுக்கும் போராட்டம்!

இதுமட்டுமல்லாமல் குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக நாட்டின் இதர பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டெல்லியில் இளைஞர் காங்கிரஸார் பதாகைகளை ஏந்தி பா.ஜ.க அரசுக்கு எதிராக முழக்கமிட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். மேலும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories