இந்தியா

மாணவிக்கு பாலியல் தொல்லை : ஷூவால் இளைஞர்களை சரமாரியாக தாக்கிய பெண் போலிஸ் - வைரல் வீடியோ!

பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்களை நடுரோட்டில் காலணியை கழற்றி தர்ம அடி கொடுத்த பெண் போலிஸின் வீடியோ வைரலாகியுள்ளது.

மாணவிக்கு பாலியல் தொல்லை : ஷூவால் இளைஞர்களை சரமாரியாக தாக்கிய பெண் போலிஸ் - வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து வருகின்றன. வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பாலியல் ரீதியிலான வழக்குகளும், வன்கொடுமைகளும் குறைந்தபாடில்லை.

குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் சர்வ சாதாரனமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிப்பதோடு சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (டிச.,10) உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பிதூர் பகுதியில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த மாணவியை பாலியல் ரீதியில் சில இளைஞர்கள் துன்புறுத்தியுள்ளனர்.

இதனைக் கண்ட பெண் காவலர் ஒருவர், மாணவியை துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய இளைஞர்களை தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து, மாணவியை தொந்தரவு செய்த இளைஞர்களை கைது செய்துள்ளது காவல்துறை.

banner

Related Stories

Related Stories